ஆ. கோவிந்தசாமி (முகையூர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆ. கோவிந்தசாமி (A. Govindasamy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சரும் ஆவார். இவர் கடலூர் மாவட்டம் வண்ணாரப்பாளையம் பகுதியினைச் சார்ந்தவர். கோவிந்தசாமி பள்ளிக் கல்வியினை கடலூர் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் பயின்றுள்ளார். திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினரான, கோவிந்தசாமி 1952, 1957[1] ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வளவனூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் 1967ஆம் ஆண்டில் நடைபெற்ற தமிழகச் சட்டப்பேரவைத் தேர்தலில் முகையூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். 1967ஆம் ஆண்டு அண்ணாதுரையின் தலைமையில் அமைந்த தமிழக அமைச்சரவையில் இவர் விவசாய துறை அமைச்சராகப் பணியாற்றினார்.[2] இவரது துணைவியார் ஏ. ஜி. பத்மாவதியும் இவரது மகன் ஏ. ஜி. சம்பத்தும் தமிழ்நாடு சட்டப்பேரவை உறுப்பினராகப் பின்னாளில் பணியாற்றினர். கோவிந்தசாமியின் கல்விப் பங்களிப்பினைப் போற்றும்விதமாக திண்டிவனத்தில் துவங்கப்பட்ட அரசு கலை அறிவியல் கல்லூரி, திரு ஆ. கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரி எனப் பெயரிடப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினராக[தொகு]

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1952 வளவனூர் சுயேச்சை
1957 வளவனூர் சுயேச்சை
1967 முகையூர் திமுக 37,598 53.76

மேற்கோள்கள்[தொகு]

  1. (in English) Madras Legislature Who is Who 1957. Madras: Legislature Department Madras. 1957 [1957] (published 27.061957). பக். 12. 
  2. தமிழ்நாட்டுச் சட்டப் பேரவை ”யார்-எவர்” 1967 [Madras Legislative Assembly-Who's Who 1967]. Madras: Madras Legislative Assembly Department. 1967 [1967] (published 01.03.1968). பக். 82. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._கோவிந்தசாமி_(முகையூர்)&oldid=3538128" இலிருந்து மீள்விக்கப்பட்டது