உள்ளடக்கத்துக்குச் செல்

ஆஸ்திரேலியாவில் யுரேனியச் சுரங்கத் தொழில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரேஞ்சர் யுரேனியச் சுரங்கம், குழி எண் 3

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவில் யுரேனியம் இருப்பது கண்டறியப்பட்டாலும், ஆஸ்திரேலியாவில் யுரேனியச் சுரங்கத் தொழில் இருபதாம் நூற்றாண்டிலிருந்துதான் தொடங்கியது.[1] கதிரியக்கத் தாதுக்கள் தெற்கு ஆஸ்திரேலியாவில் முதன்முதலில் ரேடியம் ஹில் என்ற இடத்தில் 1906 ஆம் ஆண்டிலும் மவுண்ட் பெயிண்டர் என்ற இடத்தில் 1911 ஆம் ஆண்டிலும் பிரித்தெடுக்கப்பட்டன. 2,000 டன் தாது மருத்துவ பயன்பாட்டிற்கான ரேடியத்தை மீட்பதற்காகப் பதப்படுத்தப்பட்டது. சில நூறு கிலோகிராம் யுரேனியம் சீனக்களிமண் மெருகேற்றத்துக்காகவும் உற்பத்தி செய்யப்பட்டது.[1][2] 2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, ஆஸ்திரேலியாவில் மூன்று யுரேனியச் சுரங்கங்கள் செயல்பாட்டில் உள்ளன: ஒலிம்பிக் அணை, ரேஞ்சர், மற்றும் பெவலர்லி நான்கு மைல்.[3]

2019 ஆம் ஆண்டில், உலகில் கணிக்கப்பட்ட யுரேனிய இருப்புக்களில் (4,971,000 டன்கள்) 35% ஆஸ்திரேலியாவில் (1,748,100 டன்கள்), இரண்டாவது இடத்திலிருக்கும் கஜகஸ்தானை (10% அல்லது 504,100 டன்கள்) விட மிகவும் முன்னிலையில் உள்ளது.[4][5] உற்பத்தியின் அடிப்படையில் மிகப்பெரிய ஏற்றுமதியாளர் கஜகஸ்தான், அதைத் தொடர்ந்து கனடா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை உள்ளன.[6][7] 2019 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா 6,613 டன் யுரேனியத்தை, உலக உற்பத்தியில் 12% அளவு, அணுமின் உற்பத்திக்காக ஏற்றுமதி செய்தது.[8]

2011 இன் தொடக்கத்தில் நிகழ்ந்த ஜப்பானின் புக்குசிமா அணுவுலைப் பேரழிவுக்குப் பிறகு ஆஸ்திரேலிய யுரேனியத் தேவையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் பல நாடுகள் தங்களுடைய அணுசக்தி உற்பத்தியைக் குறைத்துக் கொள்ளத் தொடங்கின. அவற்றுள் சில அணுசக்தி உலைகள் அனைத்தையும் முற்றிலுமாக மூடுவதற்குக் காலக்கெடுவைக் குறித்தன. மேற்கு ஆஸ்திரேலியா மற்றும் குயின்ஸ்லாந்து மாநில அரசுகள் புதிய சுரங்கத் திட்டங்களுக்கு அனுமதி அளித்துள்ளன. எனினும், 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி யுரேனியத்தின் விலை மிகக் குறைவாக இருப்பதால், சந்தை முன்னேற்றமடையும் வரை எந்தவொரு புதிய திட்டங்களும் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது சாத்தியமில்லை.

பல பத்தாண்டுகளாக யுரேனியச் சுரங்கத் தொழில் ஆஸ்திரேலிய அரசியல் கலந்துரையாடல்களில் ஒரு முக்கிய பகுதியாக உள்ளது. எதிர்க்கும் குழுக்கள் பரந்த அளவிலான சுற்றுச்சூழல் தாக்கங்கள், உள்நாட்டு நில அணுகல் மற்றும் அணுசக்தி பரவல் ஆகியவற்றை மேற்கோள் காட்டி இந்தத் தொழிலை நிறுத்த அல்லது கட்டுப்படுத்த வேண்டிய காரணங்களாகக் குறிப்பிடுகின்றன. இந்தக் கலந்துரையாடல் சுரங்க மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகளை மட்டுப்படுத்தச் செய்துள்ளது, எனினும் கூட்டாட்சி மற்றும் மாநில அரசுகள் அவ்வப்போது ஒப்புக்கொள்ளப்பட்ட பொதுக்கொள்கையிலிருந்து பின்வாங்கிச் செல்வதும் நிகழ்வதுண்டு.

வரலாறு[தொகு]

ரேடியம் ஹில் சுரங்கம், 1954

ரேடியச் சுரங்கத்தில் துணை பொருளாக யுரேனியம் தெற்கு ஆஸ்திரேலியாவில் ரேடியம் ஹில் என்ற இடத்தில் 1906 ஆம் ஆண்டிலும் மவுண்ட் பெயிண்டர் என்ற இடத்தில் 1911 ஆம் ஆண்டிலும் உற்பத்தி செய்யப்பட்டது. ரேடியம் புரோமைடையும் யுரேனியத்தையும் எடுக்க சிட்னியிலுள்ள ஹன்டர்ஸ் ஹில் என்ற இடத்தில் ஒரு சுத்தீகரிப்பு ஆலை 1911 முதல் 1915 வரை செயல்பட்டது. ரேடியம் மருத்துவ ஆராய்ச்சிக்காகவும் யுரேனியம் சீனக்களிமண் மற்றும் கண்ணாடியை மெருகேற்றுவதற்காகவும் பயன்படுத்தப்ட்டன.[9]

தீவிர யுரேனியத் தேடல் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐக்கிய இராச்சியம் அரசுகளின் வேண்டுகோளுக்கிணங்க 1944 க்குப் பிறகு தொடங்கியது. வெற்றிகரமான கண்டுபிடிப்புகளுக்கு 1948ல் வரிச்சலுகைகளும் அளிக்கப்பட்டன. யுரேனிய பதப்படுத்தும் வளாகம் தெற்கு ஆஸ்திரேலிய அரசால் போர்ட் பிரீ என்ற இடத்தில் அடிலெயிட்டுக்குத் தெற்கேயுள்ள ரேடியம் ஹில் மற்றும் வைல்ட்டாக் ஹில்லிருந்து பெறப்பட்ட தாதுக்களைக் கொண்டு செயல்பாட்டைத் தொடங்கியது. அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐக்கிய இராச்சியம்க்கும் வழங்கிவந்த இந்த வளாகம் பெப்ரவரி 1962 இல் மூடப்பட்டது.[10][11]

யுரேனியப் படுகைகள் வட புலத்திலுள்ள ரம் ஜங்கலில் 1949 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. பொதுநலவாயத்தால் செயல்படுத்தப்பட்டச் சுரங்கம் 1954 இல் தொடங்கப்பட்டது. மேலும் 1953ல் தென் முதலையாற்றிலும், 1954ல் மேரி கேத்லீனிலும், 1956ல் வெஸ்ட்மோர்லாந்திலும் கண்டுபிடிக்கப்பட்டன. 1954ல் ரேடியம் ஹில் மீணடும் யுரேனியச் சுரங்கமாகத் திறக்கப்பட்டது, 1950களில் எல் ஷெரானா, கோரொனேஷன் ஹில் மற்றும் பேலட் உள்ளிட்ட பிற இடங்களிலும் சுரங்கச் செயல்பாடுகள் தொடங்கப்பட்டன.[12]

1964க்குள் தீர்ந்துவிட்ட கையிருப்புகளாலும் முற்றுப்பெற்ற ஒப்பந்தகளாலும் உற்பத்தி பெரும்பாலும் நின்றுவிட்டது. இந்த முதல் நிலையில் செய்யப்பட்ட விற்பனை அணு ஆயுதத் திட்டங்களுக்காக அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் ஐக்கிய இராச்சியத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட 7,730 டன்னையும் உள்ளடக்கும், மற்றவையெல்லாம் பிற நாடுகளுக்கு மின்னுற்பத்திக்காக ஏற்றுமதி செய்யப்பட்டவை.[13]

தேடல் நடவடிக்கைகளுக்கான இரண்டாவது அலை 1960களில் மின்னுற்பத்திக்காக அணுசக்தியை உருவாக்கும் மேம்பாட்டுப் பணிகளின் போது நிகழ்ந்தது. 1970களின் பின்பகுதியில் 60 படுகைகள் கண்டறியப்பட்டன. ரேஞ்சர் படுகை 1969 லும், நபர்லேக் மற்றும் கூங்கார்ரா 1970 லும் ஜபிலூக்கா 1971 லும் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தத் தொழிலைப் பற்றிய பல விசாரணைகளுள் முதன்மையான விசாரணையை ஆஸ்திரேலிய அரசு யுரேனியத்தை அகழ்ந்து அதை ஏற்றுமதி செய்யவேண்டுமா என்ற கேள்வியையும் கொண்டிருந்த ரேஞ்சர் யுரேனிய சுற்றுச்சூழல் விசாரணை என்ற பெயரில் 1976ல் வெளியிட்டது.[14] இந்த விசாரணை நிகழ்ந்து கொண்டிருந்தபோது சுரங்க நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன, ஆனால் ரேஞ்சர் யுரேனியச் சுரங்கம் நிறுவனத்தின் 42% பங்குகளை அரசு எடுத்துக்கொண்டவுடன் அவை மீண்டும் செயல்படத்தொடங்கின. 1979ல் பொதுநலவாயம் அப்போது கட்டப்படவிருந்த ரேஞ்சர் செயல்பாட்டிலிருந்த தனது பங்கை விற்றுவிட்டு அதேவேளையில் சுரங்கங்களை உரிமையாக்கிக்கொண்டு செயல்படுத்தும் ஆஸ்திரேலிய ஆற்றல் வளங்கள் என்ற நிறுவனத்தை நிறுவியது. இறுதியாக ரேஞ்சர் 1981ல் உற்பத்தியைத் தொடங்கியது.

நபர்லேக் சுரங்கம் 1979ல் நான்கு திங்கள் செயல்பட்டது. கிடங்கில் சேகரிக்கப்பட்ட தாதுக்களைத் தூளாக்குவது 1980ல் தொடங்கியது. 1988 வரை 10,858 டன் யுரேனிய ஆக்ஸைடு தயாரிக்கப்பட்டு யப்பான், பின்லாந்து மற்றும் பிரான்சு நாடுகளுக்கு மின்னாற்றல் உற்பத்திக்கென விற்கப்பட்டது.

மேரி கேத்லீன் சுரங்கம் 1982 இறுதியில் மூடப்பட்டு ஆஸ்திரேலியாவின் முதல் யுரேனியச் சுரங்க இடமீட்புத் திட்டமானது. இது 1985 ல் முடிவடைந்தது. இதுபோன்ற ஒரு மீட்புத் திட்டம் 1980களில் ரம் ஜங்கலிலும் நடத்தப்பட்டது.[1]

தெற்கு ஆஸ்திரேலியாவில் ராக்ஸ்பி டௌன்ஸில் இருக்கும் ஒலிம்பிக் அணை, மேற்குச் சுரங்க நிறுவனத்தால் 1988ல் செயல்படத் தொடங்கியது. ஒரு மிகப்பெரிய நிலத்தடிச் சுரங்கமான இது செப்பு உற்பத்தியை முதன்மையாகவும் யுரேனியம் தங்கம், வெள்ளி முதலியவற்றைத் துணை பொருட்களாகவும் கொண்டுள்ளது. மேற்குச் சுரங்க நிறுவனத்தை 2005ல பிஎச்பி பில்லிட்டன் கையகப்படுத்தியது.

வரலாற்று நோக்கில், ஆஸ்திரேலியாவில் வாய்ப்புமிக்க பல யுரேனியச் சுரங்கங்கள் அணு ஆற்றல் எதிர்ப்பாளர்களால் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் மாநில அரசுகள் மேற்கு ஆஸ்திரேலியாவிலும் குயின்ஸ்லாந்திலும் புதிய திட்ட வளர்ச்சிக்கு அனுமதியளித்துள்ளன. 2013 ஆம் ஆண்டு நிலவரப்படி யுரேனியத்தின் விலை மிகக் குறைவாக இருப்பதால், சந்தை முன்னேற்றமடையும் வரை எந்தவொரு புதிய திட்டங்களும் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது சாத்தியமில்லை. யுரேனிய விலை உயரும் வரை கின்டைர் திட்டத்தை கமேகோ நிறுத்தி வைத்துள்ளது, பலாதீன் ஆற்றல் நிறுவனம் பிக்ரில்யி, அஞ்செலா/பமீலா, மனியிஞ்ஜீ, ஊபகூமா, வல்ஹால்லா போன்ற தனது திட்ட வரைவுகளை நடைமுறைப்படுத்த யுரேனிய விலை இன்னும் உயர்ந்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. தோரோ ஆற்றல் நிறுவனம் விலுனா வரைவை வளர்ச்சி நிலைக்கு எடுத்துச் செல்ல விரும்பினாலும் ஈடுபாட்டுள்ள முதலீட்டாளர்களை ஈர்க்க முடியவில்லை. யுரேனியத்தின் சந்தை விலை உயர்ந்தாலும் பெரும்பாலான திட்டங்கள் உற்பத்தியைத் தொடங்க குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது ஆகும்.[15]

யுரேனிய வளங்கள்[தொகு]

மேரி கேத்லீன் சுரங்கம், 2011

ஆஸ்திரேலியாவில் அறியப்பட்ட யுரேனிய வளங்களில் 96% ஆறு இடங்களிலேயே உள்ளது: உலகில் அறியப்பட்ட மிகப்பெரிய யுரேனியப் படுகையான ஒலிம்பிக் அணை, ரேஞ்சர், ஜபிலூக்கா, கூங்கர்ரா, கின்டைர் மற்றும் ஈலிர்ரீ[1] பின்வரும் வரைபடத்தில் ஆஸ்திரேலியாவிலுள்ள யுரேனியச் சுரங்கங்கள், படுகைகள் மற்றும் ஆலைகளின் அமைவிடங்களைக் காணலாம்.

Major uranium mines and deposits in Australia
நபர்லேக்
நபர்லேக்
ரம் ஜங்கல் Jungle
ரம் ஜங்கல் Jungle
மேரி கேத்லீன்
மேரி கேத்லீன்
ரேடியம் ஹில்
ரேடியம் ஹில்
வெஸ்ட்மோர்லாந்து

வெஸ்ட்மோர்லாந்து
போர்ட் பிரீ
போர்ட் பிரீ
ஹண்டர்ஸ் ஹில்
ஹண்டர்ஸ் ஹில்
Four Mile
Four Mile
Yeelirie
Yeelirie
Lake Maitland
Lake Maitland
Kintyre
Kintyre
Angela
Angela
Oobagooma
Oobagooma
Manyingee
Manyingee
Mulga Rock
Mulga Rock
Mount Gee
Mount Gee
Naperby
Naperby
Bigrlyi
Bigrlyi
Koongarra
Koongarra
Mt. Fitch

Mt. Fitch
Honeymoon
Honeymoon
ஆஸ்திரேலியாவின் முக்கிய யுரேனியச் சுரங்கங்களும் படுகைகளும்[1][16]

செயல்பாட்டில் உள்ளது    படுகை/வாய்ப்புள்ள வருங்காலச் சுரங்கம்    மூடப்பட்ட சுரங்கம்/ஆலை    நகரம்/ஊர்

(மே 2009)

சந்தை[தொகு]

பொதுவாக யுரேனியத்துக்கு ஒரே ஒரு வணிகப் பயன்பாடு மட்டுமே உள்ளது: அணுமின் நிலையங்களுக்கான மூலப் பொருள். 2022 பெப்ரவரி நிலவரப்படி உலகில் 437 அணுமின் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றின் மொத்த உற்பத்தித் திறன் ஏறத்தாழ 390 கிகாவாட்டு அளவிலான மின்னாற்றல் ஆகும்.[17] அடுத்த சில ஆண்டுகளுக்குள் மேலும் 58 அணுமின் நிலையங்கள் நிறவப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் அணுமின் நிலையங்கள் ஏதும் இல்லை, எனவே உள்நாட்டுத் தேவையென எதுவுமில்லை. நியூ சௌத் வேல்ஸிலுள்ள லூகாஸ் ஹைட்சில் ஆஸ்திரேலிய உயர்பாய்வு அணுவுலை 1958 முதல் 2007 வரை செயல்பட்டது. திறந்த வெளி ஆஸ்திரேலிய மென்னீர் அணுவுலை என்ற ஆராய்ச்சி உலை லூகாஸ் ஹைட்சில் செயல்படுகிறது.

ஆஸ்திரேலிய யுரேனியம் அகழ்ந்தெடுக்கப்பட்டு மின்னுற்பத்திக்கோ அணுக்கரு இயற்பியல் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமோ விற்கப்படுகிறது. பெரும்பாலும் எல்லா யுரேனியமும் கடுமையான பன்னாட்டு அணுசக்தி முகமையகம் குறிப்பிடும் பாதுகாப்பு முறைகளிலேயே ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அரசின் கொள்கையும் அரசியலும்[தொகு]

யுரேனியச் சுரங்கத் தொழில் ஆஸ்திரேலியாவில் மாநில மற்றும் கூட்டாட்சி நிலைகளில் குறிப்பாக ஆத்திரேலியத் தொழில் கட்சியினரிடையே மிகவும் அரசியல்முக்கியத்துவமிக்க பேசுபொருளாகும். திட்டங்களின் வளர்ச்சி பெருமளவில் சுரங்க மற்றும் ஏற்றுமதி உரிமங்களை அரசியலாக்குவதாலும் தொடர்ந்து வரும் விசாரணைகளாலும் அடிக்கடி தடுக்கப்படுகின்றது.

1982 ல் நிகழ்ந்த ஆத்திரேலியத் தொழில் கட்சியின் ஈராண்டுப் பொதுக்கூட்டத்தில் இந்தச் சிக்கல் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. 1984 ஆண்டுக் கூட்டத்தில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாப் ஹாக் தலைமையிலான அப்போதைய தொழில் கட்சி அரசு மூன்று சுரங்கக் கொள்கையை அறிமுகப்படுத்தியது.[18] அந்தக் கொள்கை ஆஸ்திரேலிய யுரேனியச் சுரங்க நடவடிக்கைகளை ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் மூன்று இடங்களில் மட்டுமே செயல்பட வழிவகுத்தது: ரேஞ்சர். நபர்லேக் மற்றும் ஒலிம்பிக் அணையைத் தவிர பிற சுரங்கங்கள் நிறுத்திவைக்கப்பட்டன. நபர்லேக் சுரங்கம் தீர்ந்தவுடன் பெவர்லி சுரங்கம் ஏற்கப்பட்டது.

ஜோன் ஹவார்ட் தலைமையில் 1996ல் வென்ற கூட்டணி அரசு, இந்தக் கொள்கையைக் கைவிட்டது.

2007 ஏப்ரல் 28ல் ஹவார்ட் அரசு யுரேனியச் சுரங்க விரிவாக்கத்துக்குத் தடையாக இருக்கும் யுரேனியத் தாது அகழ்வு மற்றும் போக்குவரத்திலிருக்கும் தேவையற்ற கடுமையான கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்குவதை இலக்காகக் கொண்ட ஒரு புதிய யுரேனிய யுத்தியை மேற்கொண்டார். அணுத் தொழில் வளர்ச்சிக்கு 1999ல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர்ச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட தடைகளை விலக்கிக்கொண்டார்.[19]

அதேநாளில் தொழிற்கட்சியும் தனது புதுச் சுரங்கங்கள் வேண்டாம் என்ற கொள்கையைக் கைவிட்டாலும் மற்ற வகையில் ஆஸ்திரேலியாவில் அணுத் தொழில் வளர்ச்சிக்கு எதிரான நிலையை எடுத்தது.[20]

2008 ல் ஆட்சிக்கு வந்தபிறகு தொழிற்கட்சி அரசு நான்காவது யுரேனியச் சுரங்கத்துக்கான அனுமதியை 2009 யூலையில் அளித்து தனது 25-ஆண்டு காலக் கொள்கையை முடித்துக்கொண்டது.[21] கூட்டாட்சியின் வளத்துறை அமைச்சர் மார்ட்டின் பெர்குசன் ஆஸ்திரேலியாவில் யுரேனிய அகழ்வை அதிகப்படுத்துவது தவிர்க்க இயலாதது என்று அறிவித்தார்.[22]

யுரேனியச் சுரங்கத்துக்கு எதிரான மாநில அரசுகளால் பின்வரும் கூட்டாட்சி அரசின் கொள்கைக்கு எதிராக சுரங்க உரிமத்தை வழங்காமல் நிறத்த முடிந்துள்ளது. 2015 திசம்பர் நிலவரப்படி, ஆஸ்திரேலிய மாநில மற்றும் ஆட்புலங்களின் தற்போதைய நிலைப்பாடு பின்வருமாறு

அண்மைய சட்ட மாற்றங்கள்[தொகு]

 • யுரேனியச் சுரங்கத்துக்கு எதிரான தடையை மேற்கு ஆஸ்திரேலியா 2008 ல விலக்கியது.
 • யுரேனியச் சுரங்கத்துக்கு எதிரான தடையை குயின்ஸ்லாந்து 2012ல் மீளப்பெற்றது. 2015 மார்ச்சிலல் பலாசுக்கின் அரசு அந்தத் தடையை மீண்டும் கொண்டுவந்தது.
 • நியூ சௌத் வேல்ஸ் அரசு, யுரேனியத் தேடல் மீதான தடையை விலக்கி யுரேனியத்தைப் பற்றியும் அதைக் கொண்டுள்ள கனிம வளங்கள் இருப்பையும் அறிந்துகொள்ள உதவியாக 2012 ல் சுரங்கச் சட்ட இணைப்பில் யுரேனியத் தேடல் சட்டத்தை இயற்றியது. இருப்பினும் யுரேனியச் சுரங்கத்துக்கு எதிரான தடை இன்னும் நீடிக்கின்றது.

எதிர்ப்பு[தொகு]

Dr Helen Caldicott
முனைவர் ஹெலன் கால்டிகோட்
கெவின் பஸ்ஸாகோட், 2014

யுரேனியச் சுரங்கங்களுக்கு ஆஸ்திரேலியாவில் குறிப்பிடத்தக்க அளவில் எதிர்ப்பு உள்ளது. ஏதிர்ப்பாளர்களில் குறிப்பிடத்தகுந்தவர்கள் ஹெலன் கால்டிகோட், கெவின் பஸ்ஸாகோட், ஜாக்கி கடோனா, இவோன் மார்கருலா மற்றும் ஜில்லியன் மார்ஷ்.[29][30][31]

2011 நவம்பரில் ஆஸ்திரேலிய பிரதம அமைச்சர் ஜூலியா கிலார்ட், அணு ஆயுதப் பரவல் தடுப்பு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடாத போதும் ஆஸ்திரேலிய யுரேனியத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய தொழிற்கட்சியின் மாநாட்டில் வேண்டுகோள் விடுத்தார். பொருளாதாரத்திற்கு மிகவும் வலுசேர்க்கும் என்ற வகையில் மாநில மற்றும் கூட்டாட்சி அரசுகளால் வரவேற்கப்பட்டாலும், ஒலிம்பிக் அணையின் விரிவாக்கம் 2010ல் பரம்பரை நில உரிமையாளர்களாலும், உள்நாட்டுச் சமூகத்தினராலும் எதிர்க்கப்பட்டது.[32] 2012 யூலையில் 400க்கும் மேலானோர் ஒலிம்பிக் அணை இடத்தில் பல்லியின் பழிவாங்கும் பேரணியில் கலந்துகொண்டனர். அணு ஆற்றலுக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் மூத்தவர் கெவின் பஸ்ஸாகோட் உட்பட பலர், சுரங்க விரிவாக்கத்துக்கும் யுரேனியத் தொழிலுக்கும் எதிராகப் போராட்டம் நடத்தினர். அவர்கள், அந்த நிறுவனமும் அரசும் சூழலியல் மற்றும் உடலியல் தொடர்பான கவலைகளை விடுத்து, குறுகிய காலப் பொருளாதார வளர்ச்சியை மட்டுமே முன்னிறுத்துகின்றன என்றனர். ஒருங்கிணைப்பாளர் நெக்டேரியா காலன், போராட்டக்காரர்களை காவல்துறை அச்சுறுத்துவதாகவும், அடையாள அட்டையைக் கோறுவதாகவும் தங்கிடத்திலிருந்து வெளியேறவோ உள்ளே செல்லவோ கட்டுப்பாடுகளை விதிப்பதாகவும் கூறினார்.[33] 2012 ஆகஸ்டில் பிஎச்பி பில்லிட்டன் புதிய விலைகுறைவான வடிவமைப்பு குறித்த விசாரணையின்படி விரிவாக்க நடவடிக்கை காலவரையற்று ஒத்திவைப்பதாக அறிவித்தது.[34][35] 2016 ல், பிஎச்பி பில்லிட்டனின் அதிபர் ஜாக்கி மக்கில், குறைவான ஆபத்துடைய, முலதனத் திறன் மிக்க நிலத்தடி விரிவாக்க முறையில் திட்ட விரிவாக்கம் முன்னெடுக்கப்படும் என்றார்.[36]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Australia's Uranium and Nuclear Power Prospects". World Nuclear Association. August 2021. Archived from the original on 2 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 3 February 2022.
 2. McKay, Aden D.; Miezitis, Yanis (2001). "Australia's uranium resources, geology and development of deposits". Mineral Resource Report 1 (AGSO – Geoscience Australia): 10. http://www.ga.gov.au/webtemp/image_cache/GA9508.pdf. பார்த்த நாள்: 27 May 2019. 
 3. "Australia's Uranium". London: World Nuclear Association. October 2018. பார்க்கப்பட்ட நாள் 28 May 2019.
 4. "Uranium 2020: Resources, Production and Demand" (PDF). Vienna: Nuclear Energy Agency and International Atomic Energy Agency. 2020. p. 21. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
 5. "Supply of Uranium". London: World Nuclear Association. December 2018. பார்க்கப்பட்ட நாள் 27 May 2019.
 6. "World Uranium Mining Production". London: World Nuclear Association. March 2019. பார்க்கப்பட்ட நாள் 27 May 2019.
 7. "World Uranium Mining". World Nuclear Association. May 2010. Archived from the original on 26 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 25 June 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 8. "Uranium Production Figures, 2010-2019". London: World Nuclear Association. September 2020. பார்க்கப்பட்ட நாள் 25 June 2021.
 9. "radiumhill.org.au website". Archived from the original on 2009-09-16. பார்க்கப்பட்ட நாள் 2022-03-02.
 10. "Uranium deposits in Australia". Government of South Australia Primary Industries and Resources. 13 March 2009. பார்க்கப்பட்ட நாள் 26 July 2009.
 11. "Port Pirie Uranium Treatment Complex, SA". sea-us.org.au. Archived from the original on 8 May 1999. பார்க்கப்பட்ட நாள் 26 July 2009.
 12. Kay, Paul. "Australia's uranium mines past and present". Parliament of Australia. Canberra: Parliamentary Library. பார்க்கப்பட்ட நாள் 28 May 2019.
 13. "Outlook for the Uranium Industry - Evaluating the economic impact of the Australian uranium industry to 2030". Parliament of Australia. Canberra: Deloitte Touche Tohmatsu (Insight Economics). April 2008. பார்க்கப்பட்ட நாள் 28 May 2019.
 14. "Major Commonwealth Inquiries and Reports relating to Uranium Mining" (PDF). Archived from the original (PDF) on 5 June 2011. பார்க்கப்பட்ட நாள் 25 July 2009.
 15. "Uranium supply: a troubled market". Nuclear Engineering International. 3 October 2013.
 16. Google Earth keyhole map of Uranium sites[தொடர்பிழந்த இணைப்பு]
 17. Michael Lampard. "Uranium Outlook to 2013-14". ABARE. Archived from the original on 13 அக்டோபர் 2009. பார்க்கப்பட்ட நாள் 26 July 2009.
 18. "Prospect or suspect – uranium mining in Australia". Australian Academy of Science. September 2002. பார்க்கப்பட்ட நாள் 24 July 2009.
 19. "Prime Minister of Australia - Media Release - Uranium Mining and Nuclear Energy: A Way Forward for Australia". 2007-06-07. Archived from the original on 7 June 2007. பார்க்கப்பட்ட நாள் 2016-04-01.
 20. Mascher, Sharon (2007). "Too Hot to Handle? Uranium and Nuclear Power in Australia's Energy Mix". Australian Resources and Energy Law Journal. http://www.austlii.edu.au/au/journals/AURELawJl/2007/54.pdf. பார்த்த நாள்: 2016-04-01. 
 21. Peter Van Onselen (18 July 2009). "The good oil: Peter Garrett knows his job". The Australian இம் மூலத்தில் இருந்து 19 ஜூலை 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090719104436/http://www.theaustralian.news.com.au/story/0,25197,25796947-5013871,00.html. 
 22. Paul Robinson and Maria Hatzakis (21 July 2009). "Qld uranium mining 'inevitable'". ABC News. http://www.abc.net.au/news/stories/2009/07/21/2631570.htm?section=business. 
 23. "Mine objections 'short-sighted'". ABC News. 15 July 2009. http://www.abc.net.au/news/stories/2009/07/15/2626609.htm?site=local. 
 24. "Barnett lifts WA uranium ban". WA Today. 17 November 2008. http://www.watoday.com.au/wa-news/barnett-lifts-wa-uranium-ban-20081117-68vl.html. 
 25. "Qld uranium mining ban on again". 2015-03-15 இம் மூலத்தில் இருந்து 2015-07-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150716140551/http://www.skynews.com.au/news/national/2015/03/15/qld-uranium-mining-ban-on-again.html. 
 26. "Uranium Exploration" பரணிடப்பட்டது 2014-07-14 at the வந்தவழி இயந்திரம் New South Wales Government - Trade & Investment, Australia. Accessed 2014-07-03.
 27. "Newman lifts uranium mining ban in Queensland" ABC News, 22 October 2012 (Retrieved 2013-12-12).
 28. "Door opens for uranium explorers in Tasmania" Sydney Morning Herald, 2007-09-24. Retrieved 2013-12-12.
 29. Aborigines count cost of mine(25 May 2004) By Phil Mercer, BBC correspondent in Darwin, BBC NEWS / ASIA-PACIFIC
 30. Anti-uranium demos in Australia(5 April 1998)BBC World Service
 31. Anti-nuke protests பரணிடப்பட்டது 28 சனவரி 2016 at the வந்தவழி இயந்திரம்(16 July 1997)By Jennifer Thompson, Green Left Weekly
 32. "Protesters issue warning on Olympic Dam expansion" (in en). Green Left Weekly. 2016-09-06. https://www.greenleft.org.au/content/protesters-issue-warning-olympic-dam-expansion. 
 33. Sarah Martin (16 July 2012). "Police accused over Olympic Dam protest". The Australian.
 34. "BHP shelves Olympic Dam as profit falls a third". 22 August 2012.
 35. "BHP given more time on Olympic Dam expansion" (in en-AU). ABC News. 2012-11-13. http://www.abc.net.au/news/2012-11-13/sa-extends-bhp-olympic-dam-mine-indenture/4369322. 
 36. "BHP announces scaled back Olympic Dam expansion plans" (in en-AU). ABC News. 2016-07-08. http://www.abc.net.au/news/2016-07-08/bhp-announces-scaled-back-olympic-dam-expansion-plans/7580668. 

புற இணைப்புகள்[தொகு]