ஆஸ்திரேலியன் சாடில்பேக் டம்ப்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஸ்திரேலியன் சாடில்பேக் டம்ப்லர்
ஆஸ்திரேலியன் சாடில்பேக் டம்ப்லர்
நிலைபொதுவாகக் காணப்படுபவை
தோன்றிய நாடுஆத்திரேலியா
வகைப்படுத்தல்
அமெரிக்க வகைப்படுத்தல்டம்ப்லர்கள், கர்ணங்கள் மற்றும் ஹைஃப்லையர்கள்
குறிப்புகள்
இவ்வினம் அதன் தனித்துவமான வண்ண முறைக்காக அறியப்படுகிறது
மாடப் புறா
புறா

ஆஸ்திரேலியன் சாடில்பேக் டம்ப்லர் (Australian Saddleback Tumbler) பல ஆண்டுகால முயற்சியில் தேர்ந்தெடுத்த கலப்பினப்பெருக்க முறையால் உருவாக்கப்பட்ட ஆடம்பரப் புறா வகையாகும்.[1] இது மாடப் புறாவிலிருந்து உருவானதாகும். இவை 1917ல் ஆத்திரேலியாவில் உருவாயின.[2] இவை பெரும்பாலும் கால்களில் இறகுடன் காணப்படும். இதன் பெயரானது அதன் முதுகில் காணப்படும் சேணை வடிவ அமைப்பின் காரணமாக ஏற்பட்டுள்ளது. இதன் தலையில் உள்ள குறியானது பட்டை (பொதுவாக) அல்லது புள்ளியாக உள்ளது. இவை பொதுவாக கருப்பு, சிவப்பு, மஞ்சள், நீலம், வெள்ளி, பாதாம் மற்றும் அன்டலூசிய வண்ணத்தில் உள்ளன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Levi, Wendell (1977). The Pigeon. Sumter, S.C.: Levi Publishing Co, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-85390-013-2. 
  2. 2.0 2.1 Seymour, Rev. Colin (Ed)(2006) Australian Fancy Pigeons National Book of Standards.