ஆஸ்கர் சாலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆஸ்கர் சாலா
Oskar Sala - 1996 - Photo Peter Pichler.jpg
தனது இசையரங்கத்தில் சாலா (1996)
பிறப்பு18 ஜூலை 1910
கிரீஸ் , செருமானியப் பேரரசு
இறப்பு26 பெப்ரவரி 2002(2002-02-26) (அகவை 91)
பெர்லின், ஜெர்மனி

ஆஸ்கர் சாலா (Oskar Sala) (18 ஜூலை 1910 - 26 பிப்ரவரி 2002) ஒரு ஜெர்மன் இசையமைப்பாளரும் மின்னணு இசையின் முன்னோடியும் ஆவார்.[1] மின்னனு கூட்டிணைப்பியின் ஆரம்ப வடிவமான டிராட்டோனியம் என்ற கருவியை இவர் வாசித்தார். [2][3]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சாலா, ஜெர்மனியின் துரிங்கியாவில் உள்ள கிரீஸில் பிறந்தார். [4] இவர் தனது இளமை பருவத்தில் பியானோ மற்றும் ஆர்கான் போன்ற இசைக் கருவிகளைப் படித்தார். இளமை பருவத்தில் பியானோ கச்சேரிகளை நிகழ்த்தினார். 1929 ஆம் ஆண்டில், இவர் பெர்லின் காப்பகத்தில் இருந்த இசையமைப்பாளரும் வயலின் மேதையுமான பால் ஹிண்டெமித்துடன் பியானோ மற்றும் இசையமைப்பைப் படிக்க பெர்லினுக்குச் சென்றார். பள்ளியின் ஆய்வகத்தில் டாக்டர் பிரெட்ரிக் ட்ரட்வீனின் சோதனைகளையும் இவர் பின்பற்றினார். டிராட்வீனின் முன்னோடி மின்னணு கருவியான டிராட்டோனியத்தை இசைக்கக் கற்றுக்கொண்டார். [4]

சாலா 1932 மற்றும் 1935 க்கு இடையில் பெர்லின் பல்கலைக்கழகத்தில் இயற்பியல் படித்தார். டெலிஃபங்கன் பிரபலப்படுத்த எதிர்பார்த்த "வோல்க்ஸ்ட்ராடோனியம்", [5] "டெலிஃபங்கன் டிராட்டோனிய"த்தை உருவாக்க இவர் உதவினார். 1935 இல் இவர் ஒரு "ரேடியோ-டிராட்டோனியம்" மற்றும் 1938 இல் ஒரு சிறிய வடிமான "கான்செர்ட்ராடோனியம்" ஆகியவற்றை உருவாக்கினார். [4] [6]

ஆஸ்கர் சாலா நாட்சி காலத்தில் இராணுவ வீரராக இருந்தவர். இரண்டாம் உலகப் போரின் போது சாலா கிழக்குப் போர் முனையில் இருக்கும்போது இவர் காயமடைந்தார். [7]

மிக்ஸ்டுர் டிராட்டோனியம், 1952

இவர் பெர்லின் சபையின் கௌரவ உறுப்பினராக இருந்தார் .

மரபு[தொகு]

18 ஜூலை 2022 அன்று, கூகுள் தனது 112வது பிறந்தநாளை கூகுளின் கேலிச்சித்திரம் மூலம் கொண்டாடியது. [8]

இலக்கியத்தில்[தொகு]

 • Peter Donhauser (2007). Elektrische Klangmaschinen. Boehlau Vienna (in German).
 • Peter Badge (2000). Oskar Sala:Pionier der elektronischen Musik. Satzwerk, 100pp. ISBN 3-930333-34-1
 • Pablo Freire / Audionautas (2011/2012). Oskar Sala. El último artesano. Parts 1234 (in Spanish)

சான்றுகள்[தொகு]

 1. "Oskar Sala – Biography". Intuitive Music. August 16, 2003. 19 July 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 June 2010 அன்று பார்க்கப்பட்டது.
 2. Hiller, Juergen (2001–2003). "Oskar Sala". 19 June 2010 அன்று பார்க்கப்பட்டது.
 3. Doepfer Musikelektroniks editorial staff. "Doepfer Musikelektronik GMBH The Trautonium Project". analogue organisation. 4 September 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 19 June 2010 அன்று பார்க்கப்பட்டது.

  A detailed technical insight into the Trautonium.
 4. 4.0 4.1 4.2 "Oskar Sala – Biography". Intuitive Music. August 16, 2003. Archived from the original on 19 ஜூலை 2011. 19 June 2010 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: unfit url (link). Intuitive Music. August 16, 2003. Archived from the original பரணிடப்பட்டது 2011-07-19 at the வந்தவழி இயந்திரம் on 19 July 2011. Retrieved 19 June 2010.
 5. "Trautonium Ela T 42 T42 "Volkstrautonium"" (German). Radiomuseum.org. 19 June 2010 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)
 6. Rainier, Chris. "The Trautonium". myspace.com. 19 June 2010 அன்று பார்க்கப்பட்டது.
 7. "Remembering scientist and musician Oskar Sala". 
 8. "Google marks 112th birth anniversary of physicist & electronic music composer Oskar Sala". 18 July 2022. https://timesofindia.indiatimes.com/india/google-marks-112th-birth-anniversary-of-physicist-electronic-music-composer-oskar-sala/articleshow/92943659.cms. பார்த்த நாள்: 18 July 2022. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்கர்_சாலா&oldid=3532654" இருந்து மீள்விக்கப்பட்டது