ஆஷ் துரை
ஆஷ் துரை | |
---|---|
ஆஷ் அவரது மனைவி மேரி மற்றும் குழந்தைகளுடன் | |
பிறப்பு | 23 நவம்பர் 1872 |
இறப்பு | 17 சூன் 1911 (அகவை 38) |
வேலை வழங்குபவர் | |
இராபட்டு வில்லியம் எசுகோட்டு ஆசு (Robert William Escourt Ashe) ICS (இந்திய நிருவாகப் பணி) (23 நவம்பர் 1872 – 17 சூன் 1911) பிரித்தானிய அரசின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்தின் தற்காலிக ஆட்சியாளராகவும் நீதிபதியாகவும் இருந்தவர்.[1][2][3] திருநெல்வேலிக்கும் தூத்துக்குடிக்கும் இடையேயுள்ள மணியாச்சி தொடருந்துச் சந்திப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.[4] சுட்டவர் திருவிதாங்கூர் சமத்தானத்தின் செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்கிற சங்கர அய்யர். ஆஷைக் கொன்றபின் தன்னைத்தானே சுட்டுக்கொண்டார். கொலை நடந்தபோது வாஞ்சியுடன் இருந்த சங்கர கிருட்டிண அய்யர் என்ற இளைஞர் தப்பித்து ஓடிவிட்டார். ஆனால் அவர் சீக்கிரமே பிடிபட்டு தண்டனையளிக்கப்பட்டார்.[5] இந்தியச் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் போது தென்னிந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட பிரித்தானிய ஆட்சியாளர் ஆஷ் ஒருவர் மட்டும்தான். பிரித்தானிய அரசு 1913ல் தூத்துக்குடியில் அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் எழுப்பியது. இப்பொழுது அந்த நினைவுச் சின்னம் பாழடைந்த நிலையிலுள்ளது.[6][7] தற்பொழுது அது மறு சீரமைக்கப்பட்டு புது பொழிவு பெற்று நினைவுச் சசின்னமாக திகழ்கிறது(2022)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ashe papers". Archived from the original on 2011-07-27. பார்க்கப்பட்ட நாள் 2010-12-02.
- ↑ "Documents in the Life of Sri Aurobindo". Archived from the original on 2007-03-11. பார்க்கப்பட்ட நாள் 2010-12-02.
- ↑ "When Gandhi visited Madras". Archived from the original on 2010-10-27. பார்க்கப்பட்ட நாள் 2010-12-02.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ "Vanchi Maniyachi". Archived from the original on 2011-07-19. பார்க்கப்பட்ட நாள் 2010-12-02.
- ↑ "In The Foot Steps Of Ashe". Archived from the original on 2010-11-24. பார்க்கப்பட்ட நாள் 2010-12-02.
- ↑ "An Irish Link". Archived from the original on 2011-06-06. பார்க்கப்பட்ட நாள் 2010-12-02.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - ↑ Memorial to man shot by Vanchinathan lies dilapidated