ஆஷா சரத்
ஆஷா சரத் | |
---|---|
![]() | |
பிறப்பு | 19 சூலை 1975 பெரும்பாவூர், கேரளா, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | ஸ்ரீசங்கரா கல்லூரி, காலடி |
பணி | நடிகை நிகழ்ச்சி தயாரிப்பாளர் நடனக் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1996–1997; 2007–2009 2011– தற்போதும் |
பெற்றோர் | வி.எஸ்.கிருஷ்ணன் குட்டி சுமதி |
வாழ்க்கைத் துணை | டி.வி.சரத் |
பிள்ளைகள் | 2 |
வலைத்தளம் | |
ashasharath |
ஆஷா ஷரத் ஒரு இந்திய பரதநாட்டிய கலைஞர் மற்றும் நடிகை ஆவார். இவர் மலையாள திரைப்படங்கள் மற்றும் மலையாள தொலைக்காட்சித் தொடர்களில் முக்கியமாக பணியாற்றுகிறார்.
பரதநாட்டியம், மோகினியாட்டம், குச்சிப்புடி, கதகளி ஆகிய நடனக்கலைகளை நன்கு அறிந்தவர் ஆவார். இவர் கும்குமப்பூவு (2011–14) என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் பிரபலமானார்.
சக்கரியாயுடே கர்ப்பிணிகள் (2013), திருஷ்யம்(2013), வர்ஷம் (2014), ஏஞ்சல்ஸ் (2014), பாபநாசம் (2015), கிங்க் லையர் (2016), அனுராக கருக்கின் வெள்ளம் (2016), முந்திரிவள்ளிகள் தளிர்க்கும் போல் (2017),புள்ளிக்காரன் ஸ்டாரா (2017), பாகம் மதியே (2018) ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்ததின் மூலம் பிரபலமானார்.
திருஷ்யம் மற்றும் அனுராகா கரிக்கின் வெள்ளம் ஆகிய படங்களில் சிறந்த துணை நடிகைக்கான இரண்டு பிலிம்பேர் விருதுகளை வென்றார்.[1]