ஆவுடை அக்காள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆவுடை அக்காள் என்பவர் 15 - 19 ஆம் நூற்றாண்டுக் காலப் பகுதியில் வாழ்ந்த பெண் தமிழ்க் கவிஞர். இவர் ஆயிரம் பாடல்களுக்கு மேல் இயற்றி உள்ளார்.[1] இவரின் பாடல்கள், பாடல்களின் கையாண்ட மொழி, உள்ளடக்கம் ஆகியன பாரதியாரில் பெரும் தாக்கத்தில் ஏற்படுத்தின என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.[2]

வாழ்க்கை[தொகு]

செங்கோட்டையில் வசதியான குடும்பத்தில் ஆவுடை அக்காள் பிறந்தார். இவருக்கு சிறுவர் திருமணம் செய்துவைக்கப்பட்டது. சிறுவயதிலேயே இவர் விதைவையானார். ஊரின் எதிர்ப்பிற்கும் மத்தியிலும் இவர் கல்வி கற்றார். இவரின் நிலைமையால் ஊர் இவரை "சாதிப் பிரஷ்டம்" செய்து வைத்தது. இவர் பாடல்களைப் புனைந்தார், சம்யச் செயற்பாடுகளில் ஈடுபட்டார், செல்வாக்குப் பெற்றார். பின்னர் ஊர்காரர்களிடம் மரியாதை பெற்றார்.[1]

ஆய்வும் திரட்டும்[தொகு]

ஆய்வுடையாரின் பாடல்கள் பல சிறு நூல்களாகவும், திரட்டு நூல்களாகவும் வெளிவந்துள்ளன. ஆவுடையக்காள் வேதாந்தப் பாடல் திரட்டு, பிரம்ம மேகம் ஆகியன குறிப்பிடத்தக்கன.

இவரைப் பற்றிய ஆய்வினை திருமதி கோமதி ராஜாங்கம் அவர்கள் செய்துள்ளார்.

பாடலில்களில் கருப்பொருள்[தொகு]

இவர் வாழ்ந்த காலத்தில் பெண்கள் அடக்குமுறை, சாதிய சமய ஒடுக்குமுறை உச்சமாக இருந்தது. இவர் சிறு வயதில் விதைவை ஆகி, "சாதிப் பிரஷ்டம்" செய்யப்பட்டார். இந்தக் கடுமையான வாழ்சூழ்நிலை இவரது பாடல்களின் கருப்பொருட்களில் வெளிப்படுகின்றது. இவரது பாடல்களில் சாதிய எதிர்ப்பு, பெண் உரிமை/பெண்ணிய, சித்த, அத்வைத, வேதாந்த கருத்துக்கள் பரந்து கிடைக்கின்றன.[1][3]

ஆவுடை அக்காளிண் பெண்ணிய கருத்துக்களை வெளிப்படுத்தும் சில எடுத்துக்காட்டுப் பாடல்கள்:

எ.கா 1

தான் பிறர் என்ற தாழ்ச்சி உயர்ச்சியும் போச்சே,
ஆண் என்றும் பெண்ணென்றும் அலைந்து திரிந்ததும் போச்சே

எ.கா 2

தீட்டென்று மூன்றுநாள் வீட்டைவிட்டு விலக்கி
நாலாம்நாள் உதயத்தில் நன்றாய் உடல் முழுகி
ஆசாரமாச்சுதென்று ஐந்தாம் நாள் முழுகி
அகத்திலுள்ள பொருள் தொடுவாய் அகத்தீட்டுபோச்சோ?

எ.கா 3

தீட்டு திரண்டு உருண்ட சிலைபோலே பெண்ணாக்கி வீட்டிலிருக்க
தீட்டு ஓடிப் போச்சோ - பராபரமே

சாதிய எதிர்ப்பு வெளிப்படும் பாடல்கள்:

எ.கா 1

ஜாதிச் சண்டை போச்சே - உங்கள்
வேத சாஸ்திரமும் வெறும் பேச்சே

எ.கா 2

எச்சிலெச்சில் என்று புலம்புகிறாய் மானுடர்கள்
எச்சில் இல்லாத இடமில்லை - பராபரமே

சமய நம்பிக்கைகள், சடங்குகள் தொடர்பாக கருத்துக்களைல் வெளிப்படுத்தும் பாடல்கள்:

எ.கா 1

அம்புலியில் தெய்வமென்று சாதிப்பார் சீமையிலே
தாருவிலே தெய்வமென்று சாதிப்பார் வைஅயத்தே
தாமிரத்தை தெய்வமென்று சாதிப்பார் தரணியிலே
மிருத்யுவே தெய்வமென்று சாதிப்பார் உலகினிலே
அப்புவே தெய்வமென்று ஆடுவார் தீர்த்தாதி
அக்கினியே தெய்வமென்று ஆகுதிகள் பண்ணிடுவார்
தத்துவமாய் மெய்ப்பொருளை தப்பவிட்டு நின்றோமோ?

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 நாஞ்சில் நாடன். (2011). பனுவல் போற்றுதும். திருச்சிராப்பள்ளி: தமிழினி.
  2. 2.0 2.1 "ஆவுடையக்காள் பற்றிப் பாரதியார் கூறாது மறைத்ததேன்?-ஆய்வறிஞர் சு.வேங்கடராமனின் கேள்வி". திண்ணை இதழ் (2007). பார்த்த நாள் 2014-03-29.
  3. 3.0 3.1 "சார்புநிலை என்னும் திரை - சு.வேங்கடராமனின் "அறியப்படாத தமிழிலக்கிய வரலாறு"". திண்ணை இதழ் (2008). பார்த்த நாள் 2014-03-29.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவுடை_அக்காள்&oldid=2718245" இருந்து மீள்விக்கப்பட்டது