ஆவரங்கால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆவரங்கால் என்பது இலங்கையின் வடபகுதியில் உள்ள யாழ் மாவட்டத்தில் காணப்படும் கிராமங்களில் ஒன்று. இது யாழ் - பருத்தித்துறை சாலையில் அமைந்துள்ளது. இதன் வடக்கே அச்சுவேலி, தெற்கே புத்தூர், மேற்கே நவக்கிரி ஆகிய கிராமங்கள் சூழ்ந்துள்ளன. இங்குள்ள மக்களின் முக்கிய தொழிலாக வேளாண்மை விளங்குகிறது.

பெயர்க் காரணம்[தொகு]

ஆவரங்கால் ஒரு காரணப் பெயர் ஆகும். இப்பெயர் கொண்டு இக்கிராமம் அழைக்கப் படுவதற்கு ஒரு கர்ணபரம்பரைக் கதை இம் மக்களிடம் செவிவழியாக உலாவுகிறது. ஆவரங்காலை இப்படி பிரிக்கலாம்.

ஆ + வரம் + கால்
ஆ = பசு .

இக்கிராமத்தில் அதிகமான மக்களின் வீடுகளை பசு அலங்கரிக்கிறது. பசுவானது இரண்டு காலில் நின்று இறைவனிடம் வரம் வாங்கிய இடம் என்பதால் இப்பெயர் வந்ததாக கிராம மக்கள் நம்புகின்றனர்.அதற்கு தகுந்தால் போல நிறை பசுக்கள் கிராமத்தில் காணப்படுகின்றன.பிரதான வீதியின் ஒரு புறம் பசும் புற்கள் நிரம்பிய தரவைகளும் . ,மறுபுறம ஊர்மனைகளும் இருக்கின்றன.

கோயில்கள்[தொகு]

 • ஆவரங்கால் சிவன் ஆலயம்
 • ஆவரங்கால் நெல்லியோடை முத்துமாரியம்மன் அம்மன் ஆலயம்
 • உள்ளி வைரவர் ஆலையம்
 • ஆவரங்கால் மேற்கு ஞான வைரவர் ஆலயம்
 • கன்னாரை அம்மன் ஆலயம்
 • மணல் பகுதி புவனேஸ்வரி அம்மன் கோயில்
 • ஆலடி முருகன் கோயில்

பெரும்பான்மை இந்துக்கள் அதிகமாக வழும் இக்கிராமத்தில் சிறு தெய்வங்களிற்கு அதிகமான கோயில்கள் காணப்படுகின்றன.குறிப்பாக வைரவர் ஆலயங்கள் அதிகம் காணப்படுகின்றன.ஞான வைரவர் என்னும் பெயரில் சில வைரவர் ஆலயங்கள் உள்ள.

கிராம செயலாளர் பிரிவுகள்[தொகு]

 • ஆவரங்கால் மேற்கு J/277
 • ஆவரங்கால் கிழக்கு J/278

பாடசாலைகள்[தொகு]

விளையாட்டு கழகங்கள்[தொகு]

 • ஆவரங்கால் மத்திய விளையாட்டுக் கழகம்
 • ஆவரங்கால் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம்

யாழ் மாவட்டத்தில் கரப்பந்து (volly ball) விளையாட்டிற்கு பிரபல்யமான ஊர் ஆகும்.

ஆவரங்கால் சந்தையடி[தொகு]

கடந்த காலங்களில் ஆவரங்கால் பருத்தி துறை வீதியின் வடக்கு பக்கத்தில் சந்தை கட்டிடத்தொகுதி ஒன்று இருந்தது.அதில் மரக்கறிகள் , பழங்கள் , மற்றும் மீன்கள் விற்பனை செய்யப்படடன.மிகவும் சுறு சுறுப்பாக ஒரு சந்தையாக இது இருந்தது .பின்பு போர் காரணமாக இது கைவிடப்பட்ட்து .இதனால் இப்பகுதிக்கு சந்தையடி என்று பெயர் வந்தது.தற்போது இப்பகுதியில் பல கடை களும் பல சேவை மையங்களும் காணப்படுகின்றன.அரச மையங்களாக பல நோக்கு கூட்டுறவு சங்கம்,உப தபால் நிலையம்,மற்றும் ஆவரங்கால் மகா ஜன வித்தியாலம் என்பனவும் இப்பகுதியிலேயே காணப்படுகின்றன.சந்தை இருந்ததற்கான அடையாளமாக இடிந்த கட்டிடத்தொகுதி காணப்படுவதையும் .இங்கு பின்னேர வேளைகளில் மீன் வியாபாரி ஒருவர் மீன்கள் விற்பதையும் கூறலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவரங்கால்&oldid=2651951" இருந்து மீள்விக்கப்பட்டது