ஆவதெல்லாம் பெண்ணாலே (1965 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆவதெல்லாம் பெண்ணாலே 1965 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1]

தாம்பத்யம் என்ற பெயரில் 1957 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான திரைப்படம் தமிழுக்கு மொழிமாற்றப்பட்டு வெளியானது. ஈ. அப்பாராவ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் ஜி. வரலட்சுமி, கும்மடி, ரேலங்கி மற்றும் பலர் நடித்திருந்தனர். சந்தர் வசனம் எழுதியிருந்தார்.

பாடல்கள்[தொகு]

புரட்சிதாசன், குயிலன் ஆகியோர் பாடல்களை இயற்ற ஜீவன் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற என் அன்பில் கலந்தாயோ என்ற பாடல் பிரபலமாக இருந்தது. சத்தியம், நித்தியகலா ஆகியோர் இப்பாடலைப் பாடியிருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

யூடியூபில் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் (திரைப்படம் பற்றிய விபரங்கள் அடங்கிய பாட்டுப் புத்தக முன் அட்டை இந்தக் காணொளியில் இணைக்கப்பட்டுள்ளது.)