ஆவணமாக்கல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐ.எஸ்.ஐ பெங்களூரு தலைமையகம இதில் டி.ஆர்.டி.சி இயங்கி வருகிறது

ஆவணமாக்கல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் (டி.ஆர்.டி.சி) (Documentation Research and Training Centre (DRTC), பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் (ஐ.எஸ்.ஐ) (Indian Statistical Institute) நூலகம் மற்றும் தகவல் அறிவியல் சார்ந்த துறைகளின் ஆய்வு மையம் (ஒரு துறையும்) ஆகும். பேராசிரியர் பி.சி.மகாலநோபிசின் ஊக்குவிப்பு மற்றும் இந்தியாவின் நவீன நூலகம் மற்றும் தகவல் அறிவியலின் தந்தை என்று அறியப்படும் பேராசியர் எஸ்.ஆர்.அரங்கநாதன் அவர்களின் ஆதரவுடன் டி.ஆர்.டி.சி 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் தொடங்கப்பட்டது.

டி.ஆர்.டி.சி, இந்திய புள்ளியியல் நிறுவனத்தின் (ஐ.எஸ்.ஐ) (Indian Statistical Institute), கொல்கத்தா வழங்கும் நூலகம் மற்றும் தகவல் அறிவியலில் முதுகலை பட்டமான எம்.எஸ்-எல்.ஐ.எஸ் (Master of Science in Library and Information Science' (MS-LIS) என்ற பட்டப்படிப்பிற்கு பயிற்சி அளிப்பதுடன், கல்வி சார்ந்த ஆய்வு நிறுவனம் (academic and research center) என்ற முறையில் முனைவர் (டாக்டர்) பட்டத்திற்கும் ஆராய்ச்சி மாணவர்கள் இங்கு பதிவு செய்து கொள்ளப்படுகிறார்கள். டி.ஆர்.டி.சி இந்தியாவின் வலுவான ஆராய்ச்சி திட்டங்கள் அடங்கிய பயிற்சிப் பள்ளி எனலாம். டி.ஆர்.டி.சி இல் ஆய்வு என்பது பயனுறு தகவல் தொழில் நுட்பத்துறையுடன் (application of information technology) ஒருமுகப்படுத்தி இணைத்த நூலகம் மற்றும் தகவல் அறிவியல் துறை சார்ந்தது ஆகும்.

டி.ஆர்.டி.சி இந்தியாவில் நூலக அறிவியல் மற்றும் தகவல் அறிவியல் துறைகளுக்கான சிறந்த ஆய்வு மையம் என்பது பரவலான கருத்தாகும். இந்த மையம் வலுவான ஆய்வுத் திட்டங்களுடன் முனைவர் பட்டத்திற்கு இத்தாலியிலுள்ள திரேண்டோ பல்கலைக்கழகத்துடன் (University of Trento, Italy.) அயல்நாட்டு இணைவாக்கமும் (PhD collaboration) கொண்டுள்ளது.

நடப்பு ஆண்டான 2012 ஆம் ஆண்டு டி.ஆர்.டி.சி பொன்விழா ஆண்டாகும். இந்த பொன்விழா ஆண்டை சிறப்பாகக் கொண்டாடும் வகையில், சிறப்பறிவு மற்றும் தகவல் இயக்க இயல்கள் பற்றிய நவீனப் போக்குகள் (International Conference on Trends in Knowledge and Information Dynamics) என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கு ஒன்று நடக்கவுள்ளது. 'International Conference on Trends in Knowledge and Information Dynamics பரணிடப்பட்டது 2012-02-18 at the வந்தவழி இயந்திரம்' (ICTK-2012).

மேலும் பார்க்க[தொகு]

External links[தொகு]