ஆவணக விபரிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆவணக விபரிப்பு (Archival Description) என்பது ஒரு ஆவணகத்தில் உள்ள ஆவணங்களைப் பற்றிய தகவல்களை பதிவுசெய்தல், தொகுத்தல், ஒழுங்குபடுத்தல் போன்ற செயற்பாடுகளை உள்ளடக்கிய செயலாக்கத்தைக் குறிக்கிறது. இந்தச் செயலாக்கத்தில் விளைவாக ஆவணகம் கொண்டிருக்கும் வளங்கள் பற்றிய கண்டுபிடிப்பு உதவி ஆதாரங்கள் (Finding Aids) உருவாக்கப்படுகின்றன. ஒரு ஆவணத்தை அடையாளம் காண, தேட, மேலாண்மை செய்ய, விளக்க ஆவணக விபரிப்புப் பயன்படுகிறது.[1]

ஆவணக விபரிப்பு குறிப்பாக பின்வரும் தகவல்களை முன்வைத்துச் செய்யப்படலாம்:[2]

  1. ஆவணம் தொடர்பான சூழமைவுத் தகவல்கள் (contextual information), உரிமையாளர் தொடர்பான தகவல்கள் (Provenance)
  2. ஆவணத்தின் கட்டமைப்பு (information about the structure of the document)
  3. ஆவணத்தின் வடிவமைப்பு (form) மற்றும் உள்ளடக்கம் (content) தொடர்பான தகவல்கள்
  4. பிற ஆவணங்கள் ஊடான உறவுகள்
  5. ஆவணம் எவ்வாறு கண்டுபிடிக்கப்படலாம், பயன்படுத்தப்படலாம் தொடர்பான தகவல்கள்

சீர்தரங்கள்[தொகு]

மென்பொருட்கள்[தொகு]

  • அற்றம் - AtoM
  • ஆர்க்கைவ்-இசுபேசு - ArchiveSpace

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archival Descriptions". accesstomemory.org. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2016.
  2. LUCIANA DURANTI. "Origin and Development of the Concept of Archival Description". journals.sfu.ca. பார்க்கப்பட்ட நாள் 6 சனவரி 2016.
  3. STEVEN L . HENSEN (1997). ""NISTFII" and EAD: The Evolution of Archival Description". American Archivist 60. http://americanarchivist.org/doi/pdf/10.17723/aarc.60.3.y833n78003316620. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவணக_விபரிப்பு&oldid=2747453" இலிருந்து மீள்விக்கப்பட்டது