ஆவணக்கோப்பு வடிவம்
ஆவணக் கோப்பு வடிவம் (document file format) என்பது உரைக்கோப்பு அல்லது இருமக்கோப்பு என்ற கணியக் கோப்புகளுக்குத் தேவையான வடிவம் ஆகும். ஒரு கணினி திரும்பத்திரும்ப பயன்டுத்துவதற்கான ஆவணத்தை, கணியத் தரவு தேக்ககத்தில் சேமிக்கிறது. இவ்வகை மறுபயன்பாட்டிற்கு தேவையான, அந்த ஆவணத்திற்கான சேமிப்பு வடிவமே, ஆவணக் கோப்பு வடிவம் என்றழைக்கப் படுகிறது. இச்சூழலில், அங்கே திரளாகவும், மாறுபாடுகள் கொண்டதாகவும் ஆவணக் கோப்பு வடிவங்கள் காணப்படுகின்றன. எதிர்காலத்திற்குத் தேவையான மிகவும் அடிப்படையான நுட்ப வடிவம் எக்ஸ்எம்எல் என்று, ஒரு மேலோட்டமான கணக்கெடுப்புத் தெரிவிக்கிறது. அதைப்போலவே, பி.டி.எவ் என்பது நிலையான வடிவமைப்புக் கொண்ட ஆவணங்களுக்கு உரிய வடிவமாகத் திகழும். எடுத்துக்காட்டுகள் XML அடிப்படையிலான திறநிலை வடிவ சீர்தரங்கள்( open format standards) DocBook, எக்சு.எச்.டி.எம்.எல், புதிய வருகையான [[சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்(ISO) /அனைத்துலக மின்னுட்ப ஆணையம் (International Electrotechnical Commission(IEC) சீர்தரங்கள், திறந்த ஆவண வடிவம் (ISO 26300:2006) மற்றும் ஒப்பிசு ஓப்பின் எக்சு.எம்.எல் (ISO 29500:2008) போன்றவைகளைக் கூறலாம்.
பொதுவான ஆவணக்கோப்பு வடிவங்கள்
[தொகு]நிறையுரை வடிவம் (Rich Text Format - RTF) — என்ற வடிவம், 1987 முதல் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால், அவர்களது மென்பொருட்களுக்காகவும், வளர்த்தோங்கச் செய்யப்படுகிறது. பல்லியக்குத்தள ஆவணப் பரிமாற்ற நிகழவும் இது பயனாகிறது [1][2][3][4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Microsoft Corporation (May 1999). "Rich Text Format (RTF) Specification, version 1.6". பார்க்கப்பட்ட நாள் 2010-03-13.
- ↑ "4.3 Non-HTML file formats". e-Government Unit. May 2002. Archived from the original on February 18, 2010. பார்க்கப்பட்ட நாள் 2010-03-13.
- ↑ "RTF (.rtf)—Wolfram Language Documentation". reference.wolfram.com.
- ↑ "WD: Rich Text Format (RTF) Specification 1.7". support.microsoft.com.
- ↑ "Techtree.com India > Technology News, Reviews of Mobile Phones, PC Hardware and Electronics, Free Downloads, Forums, Helpdesk, Ask Tech Tree". 2013-10-29. Archived from the original on October 29, 2013.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ Ranjan Parekh, Ranjan (2006). Principles of Multimedia. Tata McGraw-Hill. p. 87. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-058833-3.