ஆவடி தொடர்வண்டி நிலையம்
ஆவடி | |
---|---|
பொது தகவல்கள் | |
உரிமம் | தொடரியக அமைச்சகம், இந்திய தொடரியகம் |
நடைமேடை | 4 |
இருப்புப் பாதைகள் | 6 |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உண்டு |
மற்ற தகவல்கள் | |
பயணக்கட்டண வலயம் | தென்னக தொடரியம் (இந்தியா) |
பயணிகள் | |
பயணிகள் 2013 | நாளொன்றுக்கு 40,000[1] |
அவடி தொடருந்து நிலையம் சென்னை புறநகர் தொடர்வண்டி அமைப்பின் சென்னை மத்திய-அரக்கோணம் பிரிவின் முதன்மை தொடர்வண்டி நிலையமாகும். இது அவடி மாநகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார மக்களால் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இது அவடியில் திருமலைராஜபுரம் பகுதியில் அமைந்துள்ளது.
2008 ஆண்டு தொடரியக வெளியீட்டில், அவடி நிலையத்தை சென்னை மத்திய தொடர்வண்டி நிலைத்திற்கான துணைக்கோள் முனையமாக திட்டமிடப்பட்டுள்ளது. [2]
வரலாறு
[தொகு]29 நவம்பர் 1979 அன்று முதல் வழிதடம், சென்னை மத்திய-திருவள்ளுர் பிரிவு மின்மயமாக்கப்பட்டது. ஆவடியிலுள்ள் பன்மின்னலகு(ஈ.எம்.யூ) பெட்டி பட்டறை தடங்களும் 1 பிப்ரவரி 1980 அன்று மின்மயமாக்கப்பட்டது. இந்நிலையத்தின் மீதமுள்ள வழிதடங்களும் 2 அக்டோபர் 1986 அன்று, வில்லிவாக்கம்-ஆவடி பிரிவுடன் மின்மயமாக்கப்பட்டது [3]
இடுவமைப்பு
[தொகு]இந்நிலையம் இரண்டு வளைவுத்தடங்கள் உட்பட மொத்தம் 6 வழிதடங்களைக் கொண்டுள்ளது. நடைமேடைகளுக்கிடையே நடைப்பாலங்கள் உள்ளன.
2013 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்த நிலையம் ஒரு நாளில் ஏறத்தாழ 40,000 பயணிகளைக் கையாளுகிறது. [1]
ஆவடி வடக்கு மற்றும் மேற்கு வழிதடத்தின் பன்மின்னலகு(EMU) மற்றும் முதன்னிலை பன்மின்னலகு(MEMU) சீர் பட்டறையின் முதன்மை மையமாக உள்ளது. மேலும் கேரளாவின் முதன்னிலை பன்மின்னலகு சேவைகளையும் வழங்குகிறது.
- ↑ 1.0 1.1 "Go northwest, but don't take a train". The Times of India (Chennai: The Times Group). 27 April 2013 இம் மூலத்தில் இருந்து 30 ஜூன் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130630104528/http://epaper.timesofindia.com/Repository/getFiles.asp?Style=OliveXLib:LowLevelEntityToPrint_TOINEW&Type=text/html&Locale=english-skin-custom&Path=TOICH/2013/04/27&ID=Ar00600. பார்த்த நாள்: 28 Apr 2013.
- ↑ "Plans to develop Avadi or Ambattur railway station". The Times of India (Chennai: The Times Group). 16 November 2008 இம் மூலத்தில் இருந்து 4 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130104005947/http://articles.timesofindia.indiatimes.com/2008-11-16/chennai/27917600_1_railway-station-southern-railway-railway-board. பார்த்த நாள்: 23 Aug 2012.
- ↑ "IR Electrification Chronology up to 31.03.2004". History of Electrification. IRFCA.org. பார்க்கப்பட்ட நாள் 17 Nov 2012.