ஆவடி ஏரி
ஆவடி ஏரி Avadi Aeri | |
---|---|
![]() ஆவடி ஏரி | |
அமைவிடம் | ஆவடி, சென்னை, இந்தியா |
ஆள்கூறுகள் | 13°06′25″N 80°06′22″E / 13.107°N 80.106°E |
வகை | ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
மேற்பரப்பளவு | 87.06 ஏக்கர் [1] |
குடியேற்றங்கள் | சென்னை |
ஆவடி ஏரி (Avadi Lake) என அழைக்கப்படும் பருத்திப்பட்டு ஏரி இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்திருக்கிறது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புஎஆகியவற்றுக்கு பின்புறமாக ஆவடி ஏரி உள்ளது. 2.64 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட இந்த ஏரி 87.06 ஏக்கர் பரப்பளவுக்கு விரிந்துள்ளது [1]. பல ஆண்டுகளாக இந்த ஏரி வற்றாமல் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஏரி நீண்ட காலத்திற்கு முன்னர் பண்ணை நிலங்களை பயிரிடுவதற்கான ஒரு ஆதாரமாக இருந்தது எனக் கருதப்படுகிறது. பல்வேறு பருவகாலங்களில் நீர்நிரம்பியிருபதால் பல பறவைகளை இந்த ஏரி கவர்ந்திழுக்கிறது.
இருப்பினும், சமீபத்திய பத்தாண்டுகளில் இந்த ஏரியின் பரப்பளவு வெகுவாக குறைந்து போயுள்ளது.
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப 28.15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஏரி புனரமைக்கப்பட்டு பசுமை பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்கா மற்றும் படகு சவாரி 2019ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சி பகுதியில் கழிவு நீர் மற்றம் மழைநீர் கட்டமைப்பு முறையாக பராமரிக்கப்படாததால் ஏரியில் கலக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Time to restore vanishing water bodies". Madras Musings XXVIII (2). May 1–15, 2018. http://www.madrasmusings.com/vol-28-no-2/time-to-restore-vanishing-water-bodies/. பார்த்த நாள்: 21 October 2018.