ஆழ்வார்குறிச்சி பரும்பு முப்பிடாதி அம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஸ்ரீ தலை சாய்ந்த முப்புடாதி அம்மன் கோயில் ஆழ்வார்குறிச்சி பேரூராட்சியில் உள்ள ஒரு கோயில் ஆகும்.

முப்பிடாதி அம்மன்[தொகு]

மகிசாசுரனை அழிக்க அம்பிகை எட்டு பெண் குழந்தைகளாக நாகலோகத்தில் பிறந்தாள். அவர்களில் மூன்றாவதாக பிறந்த பெண் குழந்தைதான் முப்பிடாதி.

கோயிலில் உள்ள தெய்வங்கள்[தொகு]

இக்கோயிலில் உள்ள முப்பிடாதி அம்பாள் கருவறையில் மூத்த இரு சகோதரிகளான முத்தாரம்மாவை வலப்புறமும் சந்தனமாரியை இடப்புறமும் கொண்டு நடுவில் காட்சி தருகின்றாள் பரிவார தெய்வங்காக வனப்பேச்சி. சின்னநம்பி, கொடிமாடன், அழகுமுத்து, அழகுநாச்சி, காத்தவராய், பைரவர் ஆகிய தெய்வங்களும் உள்ளன. கோவிலுக்கு வெளியே தங்கம்மனுக்கும், மாடசுவாமிக்கும் தனிக் கோவில்கள் உள்ளது. ஐந்தாவது குழந்தையான தங்கம்மன் சன்னதியில் உச்சினிமாகாளி, வடக்குத்தி அம்மன், தங்கம்மன், காத்தவராயர் ஆகிய தெய்வங்கள் உள்ளன. சுடலையின் அம்சமான மாடசுவாமி கோவிலில் பேச்சியம்மன், பிரம்மராட்சி, மாடசுவாமி, சின்னநம்பி ஆகிய தெய்வங்கள் உள்ளன.