ஆளும் மன்றச் செய்யுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒரு ஆளும் மன்றச் செய்யுள் (Act of Parliament) என்பது ஒரு நாட்டின் நாடாளுமன்றத்தால் முதன்மைச் சட்டமாக இயற்றப்படும் எழுத்துருச் சட்டம் ஆகும். அயர்லாந்து குடியரசில் இது ஓய்ரீச்டாஸ் செய்யுள் என்றும் அமெரிக்க ஒன்றிய நாடுகளில் இது காங்கிரசின் செய்யுள் என்றும் அழைக்கப்படுகிறது.

பொதுநலவாய தேசங்களில், குறுகிய நோக்கில் குறிப்பிட்ட ஆட்சிப் பகுதியில் நிறைவேற்றப்படும் முறையாக விவரிக்கப்பட்ட கொள்கைகள் எனவும், பரந்த நோக்கில் ஏதேனும் நாட்டில் ஏற்றுக்கொள்ளப்படும் முதன்மை சட்டம் எனவும், இரண்டு விதமாகப் பயன்படுத்தப்படுகிறது.

சட்ட முன்வடிவம்[தொகு]

ஆளும் மன்றத்தின் ஒரு வரையப்பட்ட செய்யுளை ஒரு சட்ட முன்வடிவம் எனலாம்.

மேற்கத்திய அமைச்சக முறைச் சார்ந்த ஆட்சிப் பகுதிகளில், பெரும்பாலும் ஒரு சட்ட முன்வடிவம் சட்டமாவதற்கு முதலில் ஆளும் மன்றங்களாகிய பாராளுமன்றம் அல்லது நாடாளுமன்றம் போன்றவற்றில் அரசினால் அறிமுகம் செய்யப்பட வேண்டும். இதுப் பொதுவாக வெள்ளை அறிக்கையாக புதியச் சட்டத்தை பரிந்துரை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள முறையில் சட்டத்தின் தேவையைச் சுட்டிக் காட்டி வெளியிடப்பட வேண்டும். சட்ட முன்வடிவங்கள் அரசின் ஆதரவு இல்லாமலும் மன்றத்தில் அறிமுகம் செய்யலாம், இது தனிப்பட்ட உறுப்பினரின் சட்ட முன்வடிவு எனப்படும். பல அவைகளைக் கொண்ட ஆளும் மன்றத்தை உடைய ஆட்சிப் பகுதிகளில், பெரும்பாலான சட்ட முன் வடிவங்கள் முதலில் ஏதேனும் ஓர் அவையில் அறிமுகம் செய்யப்படலாம். ஆனால் சில தரத்தில் உள்ள சட்டமயமாக்கங்கள், அரசியல் அமைப்பு மரபின் படி அல்லது சட்டத்தினால் குறிப்பிட்ட அவையில் அறிமுகம் செய்யப் படவேண்டும் என இருப்பின் அந்த அவையில் முதலில் அறிமுகம் செய்யப்படும். எடுத்துக்காட்டாக வரிவிதிப்பு மற்றும் நிதி தொடர்பான சட்ட முன்வடிவுகள் இந்தியப் பாரளுமன்றத்தின் மக்களவையில் அறிமுகம் செய்யவேண்டும்.

ஒருமுறை அறிமுகம் செய்யப்பட்ட ஒரு சட்ட முன்வடிவு சட்டமாவதற்கு முன் பல படிகளைக கடக்க வேண்டியுள்ளது. தத்துவத்தில், இது சட்ட முன்வடிவுகளில் உட்படுத்தப்படுள்ளவையின் மேல் விரிவான விவாதத்திற்கு அனுமதிக்கிறது. மற்றும், இது முதலேற்பு சட்ட முன்வடிவில் மாற்றங்கள் கொண்டு வருவதற்கான அறிமுத்தையும், அதன் மேலான விவாதத்தையும் ஏற்கிறது.

ஈரவை ஆளும் மன்றங்களில், ஒரு சட்ட முன்வடிவு அது அறிமுகம் செய்யப்பட்ட அவையினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பின் மறு அவைக்கு அனுப்பப் படும். சரியாக கூறவேண்டும் என்றால், ஒவ்வொரு அவையும் சட்ட முன்வடிவின் அதேத் தரத்தில் தனித்தனியே ஏற்றுக்கொள்ள வேண்டும். இறுதியாக சட்ட முன்வடிவு ஒப்புதலைப் பெறுகிறது. பெரும்பாலான நாடுகளில் ஒப்புதல் வழங்கும் பொருப்பு நாட்டின் தலைவருக்காகும்.

சில நாடுகளில், குறிப்பாக ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல், சட்ட முன்வடிவு அரசினால் கொண்டுவரப்பட்டது அல்லது ஆளும் மன்றத்தால் கொண்டுவரப்பட்டது என்பது சார்ந்து வேறுபடுகிறது. அரசினால் கொண்டுவரப்படுவது செயல்திட்டம் எனவும், மன்றத்தால் கொண்டுவரப்படுவது தனிப்பட்ட உறுப்பினரின் சட்ட முன்வடிவு எனவும் அழைக்கப்படுகிறது.

செய்யுளின் தலைப்பும் மேற்கோள்களும்[தொகு]

இங்கிலாந்து பாரளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் சட்டச் செய்யுளிற்கு முதலேற்பில் தலைப்புகள் காணப்படுவதில்லை, மற்றும் இது எந்த பாரளுமன்றக் கூட்டுத்தொடரில் ஏற்றுக்கொள்ளப்பட்டதோ அதன் மேற்கோளால் பொதுவே எடுத்துரைக்கப்படும். ஒவ்வொரு தனிப்பட்ட நியமமும் படல எண்ணால் அடையாளம் காணப்படுகிறது. பகுப்பு தலைப்புகள், சட்டமாக்கப்பட்ட செய்யுள்களில் அலுவலக எழுத்தர்களால் மேற்கோள் உதவியுடன் ஒவ்வொரு சட்ட முன்வடிவு நூட்களிலும் சேர்க்கப்படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பகுதியில் நீலமான முக்கியத் தலைப்பிற்கு மாற்றாக செய்யுளில் குறுந்தலைப்பு சேர்ப்பது பொதுவாக பின்பற்றபடலாயிற்று.

செய்யுள்கள் எண்ணால் எடுத்துரைக்கப்படுவதும் காலத்தால் மாற்றப்பட்டது. அரசுசார் ஆண்டுமுறைகளும் பல ஆட்சிப் பகுதிகளிலும் நாட்காட்டி ஆண்டுமுறையாக்கப்பட்டது.

வெளியிணைப்புகள்[தொகு]