ஆளுநரின் வளைவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆளுநரின் வளைவு
Map
பொதுவான தகவல்கள்
நகரம்கோவா
நாடுஇந்தியா
நிறைவுற்றது1599

ஆளுநரின் வளைவு (Arch of Viceroy) என்பது 1599 ஆம் ஆண்டில் இந்தியாவின் கோவாவில் போத்துக்கேய ஆளுநராக இருந்த பிரான்சிஸ்கோ ட காமாவால் அமைக்கப்பட்டது. இவர் வாஸ்கோ டா காமாவின் பேரனாவார். 1954 ஆம் ஆண்டில் இந்த வளைவு சேதமைடைந்தது. பின்னர் மீட்டெடுக்கப்பட்டது. இது கோவாவில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

1940களில் ஆளுநரின் வளைவு

ஆற்றை எதிர்கொள்ளும் வளைவின் பக்கவாட்டில், வாஸ்கோ ட காமாவின் நினைவிடத்தில் ஒரு மான் சின்னம் உள்ளது. இந்த வளைவின் மையத்தில் வாஸ்கோ ட காமாவின் சிலையும் உள்ளது.[1] நகரத்தை நோக்கியுள்ள பக்கத்தில் கிரீடத்தையும் அங்கியையும் அணிந்துள்ளவாறு ஒரு ஐரோப்பிய பெண் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் ஒரு கையில் வாளையும் மறு கையில் ஒரு திறந்த புத்தகத்தையும் கொண்டுள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Viceroy's Arch | India Attractions". Lonely Planet (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
  2. RoyChoudhury, Indrajit (2018-10-27). "Viceroy's Arch in Old Goa". Indrosphere (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-07-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆளுநரின்_வளைவு&oldid=3200754" இலிருந்து மீள்விக்கப்பட்டது