ஆல் பாஃர் லவ் (நாடகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல் ஃபார் லவ்
திருமதி வார்டு ஆக்டாவியாவாக
கதைஜான் டிரைடன்
வெளியீட்டு திகதி1677
வெளியீட்டு இடம்இலண்டன்
மொழிஆங்கிலம்
மையம்அந்தோனியும் கிளியோபாத்ராவின் தழுவல்
கருப்பொருள்துன்பியல்
Settingஅலெக்சாந்திரியா, எகிப்து

ஆல் ஃபார் லவ்; அல்லது தெ வேர்ல்டு வெல் லாஸ்ட் (All for Love; or, the World Well Lost),1677இல் வெளியான ஜான் டிரைடனின் சிறந்த மற்றும் பரவலாக அறியப்படும் நாடகமாகும். இது ஒரே சீரான சந்த அமைப்புடைய ஆனால் அடிகளின் ஈற்றுப் பகுதி ஒரே வகையான ஓசையைக் கொண்டிராத துன்பியல் நாடகம் ஆகும். தீவிர நாடகம் புத்தியிர் பெறுவதற்கு இது குறிப்பிடத்தகுந்த பங்காற்றியுள்ளது. இந்த நாடகம் வில்லியம் சேக்சுபியரின்,அந்தோனியும் கிளியோபாத்ராவின் அங்கீகரிக்கப்பட்ட தழுவலாகும். இது நாயகன் மற்றும் நாயகியின் வாழ்க்கையின் கடைசி காலகட்டத்தினைக் குறிப்பிடுகிறது.[1]

பின்னணி[தொகு]

சேக்சுபியரின் அந்தோணியும் கிளியோபாத்ரா எனும் அதே தலைப்பினைக் கையாண்டிருந்தாலும் டிரைடன் அலெக்சாந்திரியாவுடன் கதையுடன் மட்டுப்படுத்துகிறார்.1677இல் முதலில் நாடகம் நிகழ்த்தப்பட்டது.1704 இல் புத்துயிர் பெற்ற பின்னர்,1700 முதல் 1800 வரை 123 முறை நிகழ்த்தப்பட்டது. சேக்சுபியரின் நாடகம் 1813வரை இலண்டன் அரங்கத்தில் நிகழ்த்தப்படவில்லை.[2]

அசல் பதிப்பானது 1967இல் கிங்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மார்க் ஆண்டனியாக சார்லஸ் ஹார்ட் மற்றும் கிளியோபாட்ராவாக எலிசபெத் பௌடெல் நடித்தனர், மைக்கேல் மோகன் வென்டிடியசாகவும், கேத்தரின் கோரி ஆக்டேவியாவாகவும் நடித்தனர்.[3] பிப்ரவரி 1704 இல் லிங்கனின் இன் ஃபீல்ட்ஸில் இந்த நாடகம் மீண்டும் புத்துயிர் பெற்றது, பெட்டர்டன் ஆண்டனியாகவும் திருமதி. பேரி,கிளியோபாட்ராவாகவும், டொலபெல்லாவாக வில்க்சும் மற்றும் ஆக்டேவியாவாக பிரேஸ்கர்டிலும் நடித்தனர்; டிசம்பர் 1718 இல் டுரூரி லேனில், பூத் ஆண்டனியாகவும், திருமதி. ஓல்ட்ஃபீல்ட் கிளியோபாட்ராவாகவும், திருமதி. ஆக்டேவியாவாக போர்ட்டரும் நடித்திருந்தனர்.

கதைச் சுருக்கம்[தொகு]

பாகம் - I[தொகு]

எகிப்தின் வரவிருக்கும் அழிவின் (புயல்கள், சூறாவளிகள் மற்றும் நைல் நதியின் வெள்ளம்) சகுனங்களை செராபியன் முன்னரே விவரிக்கிறார். கிளியோபாட்ராவின் அமைச்சரான அலெக்சாஸ், செராபியனின் கூற்றுக்களை நிராகரித்து, கிளியோபாட்ராவின் ஆண்டனியின் உறவில் அதிக அக்கறை காட்டுகிறார். கிளியோபாட்ரா ஆண்டனியின் மீதான விருப்பத்தினையும், ஆண்டனி கிளியோபாட்ராவை தொடர்ந்து பார்க்க மாட்டாரா என்று கவலைப்படுவதையும் அவர் காண்கிறார். எனவே, செராபியன் ஆண்டனியின் மாண்பினைக் கொண்டாட ஒரு திருவிழாவை நடத்துகிறார்.

சான்றுகள்[தொகு]

  1. Dryden, John. All for Love. London:Nick Hern Books Limited, 1998.
  2. Caldwell, Tanya (Fall 2004). "Meanings of "All for Love", 1677-1813". Comparative Drama 38 (2/3): 185. doi:10.1353/cdr.2004.0037. 
  3. John Downes, Roscius Anglicanus, London, 1708; Montague Summers, ed., London, Fortune Press [no date]; reprinted New York, Benjamin Blom, 1963; p. 11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்_பாஃர்_லவ்_(நாடகம்)&oldid=3800306" இலிருந்து மீள்விக்கப்பட்டது