ஆல்வின் டாப்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆல்வின் டாப்லர்

ஆல்வின் டாப்லர் (Alvin Toffler 4 அக்டொபர் 1928--27 சூன் 2016) என்பவர் நியுயார்க்கைச் சேர்ந்த சமூக அறிவியல் அறிஞர், நூலாசிரியர், எழுத்தாளர் ஆவார் இவர் எதிர்கால அதிர்ச்சி என்னும் நுலின் ஆசிரியர். 1970 இல் வெளிவந்த இந்த நூல் இலக்கக் கணக்கில் விற்பனையாகிப் புகழ் பெற்றது. [1]

இளமைக் காலம்[தொகு]

யூதப் பொலீசு இனத்தில் பிறந்த ஆல்வின் டாப்லர் நியூயார்க்குப் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றார். அப்போது மார்க்சியக் கருத்துகளில் ஆர்வம் கொண்டார். தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டார். ஓகியோவில் தொழிற் சாலையில் பணி செய்த அனுபவமும் ஏற்பட்டது. அதனால் தொழிலாளர்களின் இன்னல்களையும் அவர் உணர்ந்தார். [2]

கணிப்பாளராக[தொகு]

  • இனி வரும் காலத்தில் கணினி, இணையம், பொருளியல், தொழில் நுட்பம் போன்ற வளர்சசி நிலை மாற்றங்கள் ஏற்படும் என முன் கூட்டியே ஆல்வின் டாப்லர் கணித்தார்.
  • கணம் தோறும் முன்னேறி வரும் தகவல் புரட்சி என்பது பொதி சுமப்பது போல் ஆகும் என விவரித்தார்.
  • குடும்ப வாழ்க்கை முறை சிதையும் என்றும் குற்ற நடவடிக்கைகள் பெருகும் என்றும் மயக்க மருந்துகள் பயன்படுத்தல் அதிகமாகும் என்றும் அறிவு சார்ந்த அரசியல் வளரும் என்றும் கணித்தார்.
  • குளோனிங் முறையில் உயிரினங்கள் உருவாக்கும் காலம் வரும் எனவும் முன்னதாக கணித்தார்.

பாராட்டுகளும் விருதுகளும்[தொகு]

சோவியத்து யூனியன் தலைவர் மிகைல் கர்பசோவ், சீனாவின் தலைவர் சூ சியாங், மெக்சிகோவைச் சேர்ந்த பெரும் பணக்காரர் கார்லொசு சிலிம் போன்றோர் டாப்ளர் கருத்துகளினால் ஈர்க்கப்பட்டார்கள். பல பன்னாட்டு விருதுகளை டாப்ளர் பெற்றார். அவற்றில் முக்கியமானவை மெக்கன்சி அறக்கட்டளை, அமெரிக்க அறிவியல் வளர்சசி சங்கம் , பிரவுன் பல்கலைக் கழகம் வழங்கிய விருதுகள் ஆகும்.

மூன்றாவது அலை என்னும் நூலை 1980 இலும் அதிகார மாற்றம் என்னும் நூலை 1990 இலும் டாப்லர் வெளியிட்டார்.

மேற்கோள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்வின்_டாப்லர்&oldid=2105434" இருந்து மீள்விக்கப்பட்டது