உள்ளடக்கத்துக்குச் செல்

ஆல்பிரெக்ட்சுராஃபைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்பிரெக்ட்சுராஃபைட்
Albrechtschraufite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுCa4Mg(UO2)2(CO3)6F2·17H2O
இனங்காணல்
மோலார் நிறை1,428.98 கிராம்
நிறம்மஞ்சள் பச்சை
படிக அமைப்புமுச்சாய்வு
பிளப்புஇல்லை
முறிவுசங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை2–3
மிளிர்வுபளபளக்கும்
அடர்த்தி2.6 கி/செ.மீ3
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (−)
பிற சிறப்பியல்புகள் கதிரியக்கம்

ஆல்பிரெக்ட்சுராஃபைட்டு (Albrechtschraufite) என்பது Ca4Mg(UO2)2(CO3)6F2·17H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும்.[1][2][3] மிகவும் அரிய கனிமமான இக்கனிமம் நீரேறிய கால்சியத்தையும் மக்னீசியத்தையும் கொண்டிருக்கும் யுரேனைல் புளோரைடு கார்பனேட்டு கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் ஆல்பிரெக்ட்சுராஃபைட்டு கனிமத்தை Asf[4] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

ஆல்பிரெக்ட்சுராஃபைட்டு கனிமத்தின் மோலார் எடை 1,428.98 கிராம் ஆகும். மஞ்சள்-பச்சை, கோடு வெள்ளை நிறத்தில் இது காணப்படுகிறது. அடர்த்தி 2.6 கிராம்/செ.மீ3 ஆகவும் மோவின் கடினத்தன்மை 2–3 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது. கண்ணாடி போன்ற பளபளப்பு கொண்டுள்ளது. வியன்னா பல்கலைக்கழகத்தின் கனிமவியல் பேராசிரியரான ஆல்பிரெக்ட் சுராஃப் (1837–1897) நினைவாக ஆல்பிரெக்ட்சுராஃபைட்டு எனப் பெயரிடப்பட்டது. செக் குடியரசின் போகேமியாவின் கார்லோவி வேரி பிராந்தியத்தில் உள்ள கிருசுனே கோரி மலைகள், இயாச்சிமோவு மாவட்டம் ஆகிய இடங்களில் இக்கனிமம் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mindat
  2. Webmineral
  3. Handbook of Mineralogy
  4. Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பிரெக்ட்சுராஃபைட்டு&oldid=4229773" இலிருந்து மீள்விக்கப்பட்டது