ஆல்பிரட் இ மான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆல்பிரட் இ மான்
மான், திசம்பர் 2010
மான், திசம்பர் 2010
பிறப்பு1925[1]
போர்ட்லன்ட் (ஒரிகன்)
இறப்புபிப்ரவரி 25, 2016 (அகவை 90)
லாஸ் வேகஸ்
தேசியம்ஐக்கிய அமெரிக்கா
கல்வி(கலிபோர்னியா பல்கலைக்கழகம் (லாஸ் ஏஞ்சலஸ்))
பணிதொழில் முனைவர்
சொத்து மதிப்புGreen Arrow Up Darker.svg US $ 1.5 பில்லியன் (திசம்பர் 2015)[2]

ஆல்பிரட் இ மான் (Alfred E. Mann) (1925 – பிப்ரவரி 25, 2016), ஒரு அமெரிக்கத் தொழில் முனைவோர் மற்றும் கொடையாளி ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

மான் போர்ட்லண்டில் யூதக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்[3]. மளிகைக் கடைக்காரரான அவரது தந்தை இங்கிலாந்திலிருந்து புலம் பெயர்ந்தவர். அவரது தாய் பியானோ இசைக்கலைஞரும் பாடகருமான அவரது தாய் போலந்திலிருந்து புலம் பெயர்ந்தவர்.[4] 1946 இல் மான் லாஸ் ஏஞ்சலசுக்குப் குடிபெயர்ந்தார்.

மான் பல தொழில்களைத் தொடங்கி வெற்றி பெற்றார். மருத்துவ உபகரணங்கள் தயாரிப்புத் தொழிலில் ஈடுபட்டார். இதய நோயாளிகளுக்கான பேஸ் மேக்கர், சர்க்கரை நோயாளிகளுக்கான சுவாசிக்கக்கூடிய இன்சுலின் மருந்து போன்றவற்றை இவரது மான்கைன்ட் நிறுவனம் கண்டுபிடித்தது. பின்னர், அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சிக்கு அவசியமான சோலார் பேட்டரிகள் இவரது தயாரிப்புகளுள் ஒன்றாகும். இவர் கொடையாளியாகவும் விளங்கினார்[5].

இறப்பு[தொகு]

பிப்ரவரி 25, 2016 இல் ஆல்பிரட் இ மான் தனது 90-வது வயதில் மரணம் அடைந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பிரட்_இ_மான்&oldid=2707874" இருந்து மீள்விக்கப்பட்டது