ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சுயசரிதை
அறிமுகம்[தொகு]
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சுயசரிதையானது அலிஸ் காலப்ரைஸ் மற்றும் ட்ரெவோர் லிப்ஸ்கோம்ப் என்பவர்களால் தமிழில் மொழி பெயர்த்து எழுதப்பட்டுள்ளது. ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் 1952 ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதியன்று வரலாறு எழுதும் கார்ல் சாலிக் என்பவருக்கும் எழுதும் போது "எனக்கு சிறப்பான திறமைகள் எதுவுமில்லை.நான் ஆர்வமிகுதியுடன் கூர்ந்து பார்க்கிறேன் அவ்வளவே" என்று கூறுவதாக நூலாசிரியர்கள் விளக்குகிறார்கள்.
முன்னுரை[தொகு]
முன்னுரையில் ஐன்ஸ்டீன் பற்றிய நூல் எதற்கு என்று விளக்கப்பட்டுள்ளது.நம்முலகில் நேர்மறையான புரட்சியை ஏற்படுத்தி என்னாளும் நிலைக்கும் பங்களிப்புடன் கூடிய ஒருவராகத் திகழ்பவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.இவர் உயர்நிலை விஞ்ஞானியாகவும், மிகச் சிறந்த மனிதாபிமானியாகவும் இருநிலை நட்சத்திரமாக விளங்குகிறார். எனவே அவரைப் பற்றி முன்னிரையில் விளக்கப்பட்டுள்ளது.
இந்நூலின் பகுதிகள்[தொகு]
இந்நூலின் பகுதிகள் 12 பகுதிகளாக உள்ளன. பிறந்தேன் என்பதே தெரிந்த செய்தி, மனவளப் பயிற்சி, காதலிக்கவும் கடமையாற்றவும், அதிசயங்கள் ஆண்டு 1905 ல் இயற்பியல் சாதனைகள், சுவிட்சர்லாந்தில் கல்வி வாழ்க்கை, பெர்லினில் ஆரம்ப ஆண்டுகள்;போரும் அமைதியும், பொது தொடர்பியலுக்கான வழி, பெர்லினில் பிந்தைய ஆன்டுகள்; போருக்குப்பின் குழப்பமும் ஹிட்லரின் எழுச்சியும், மீண்டும் அப்பாதையில், அமெரிக்காவிற்கு வந்தார், கடுமைநிறைந்த குழந்தையின் கடைசி நாட்கள், பரிசோதனையாளர் ஐன்ஸ்டீன் என்ற 12 பகுதிகளாக விளக்கப்பட்டுள்ளது.
சான்றாதாரம்[தொகு]
ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்-சுயசரிதை(2013).அலிஸ் காலப்ரைஸ் மற்றும் ட்ரெவோர் லிப்ஸ்கோம்ப்.ஜெய்கோ பப்ளிஷிங் ஹவுஸ், மும்பை-400 001.