ஆல்பர்டோ கியுராமில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்பர்டோ கியுராமில்
Alberto Curamil
பிறப்பு1974
தேசியம்சிலி
பணிமாபூச்சி இனக்குழுவின் பிரதிநிதி
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2019)

ஆல்பர்டோ கியுராமில் (Alberto Curamil) சிலி நாட்டின் அரௌகனியா மண்டலத்தைச் சேர்ந்த சுற்றுசூழல் செயல்பாட்டாளர் மற்றும் தலைவராவார். 1974 ஆம் ஆண்டு பிறந்த இவர் மாபூச்சி இனப் பூர்வீகக் குழுவைச் சேர்ந்தவர். நீர்மின்சார மேம்பாட்டுத் திட்டங்களிலிருந்து புனித நதியாகக் கருதப்படும் கௌடின் நதியைப் பாதுகாக்கும் முயற்சிகளுக்காக இவருக்கு 2019 ஆம் ஆண்டு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. அணைகளின் கட்டுமானத்தை நிறுத்துவதற்காக சிலியின் அரௌகனியா மண்டலத்தைச் சேர்ந்த உள்ளூர் மக்கள், வழக்கறிஞர்கள் மற்றும் விஞ்ஞானிகளை அணிதிரட்டி இவர் போராடினார். நீர்மின் திட்டங்களால் காடுகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் அழிந்துவிடும் என்று இவர் வாதிட்டார். பொது எதிர்ப்பையும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த போதுமான மதிப்பீட்டையும் சுட்டிக்காட்டி 2016 ஆம் ஆண்டு கௌடின் நதியின் மீது கட்டப்படவிருந்த நீர்மின் திட்டங்களுக்கான திட்டங்களை சிலி அரசாங்கம் இரத்து செய்தது.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Alberto Curamil". goldmanprize.org. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
  2. Loftus-Farren, Zoe (29 April 2019). "Jailed Chilean Anti-Dam Warrior Awarded 2019 Goldman Environmental Prize". Earth Island Journal. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019.
  3. Leahy, Patrick (23 May 2019). "Statement On Alberto Curamil". Archived from the original on 15 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 16 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. https://www.bbc.com/news/world-latin-america-48104817
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்பர்டோ_கியுராமில்&oldid=3861569" இலிருந்து மீள்விக்கப்பட்டது