ஆல்டிரோவேண்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Aldrovanda இது ஒரு அசைவம் உண்ணும் தாவரம். இதை நீர் சுழல் தாவரம் என்றும் அழைப்பார்கள். மேலும் இதை (Water fly trap) நீர் பூச்சிகளைப் பிடிக்கும் தாவரம் என்றும் அழைக்கலாம். இது திரோசிரோசியீ என்னும் இரட்டை விதையிலைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் ஆ. வெசிகுலோசா (A.Vesiculosa) . என்கிற ஒரே ஒரு செடி மட்டுமே உள்ளது.

ஆ. வெசிகுலோசா

காணப்படும் பகுதிகள்[தொகு]

முதன் முதலில் கி.பி.1696-ல் இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இவை ஜப்பான், பிரான்ஸ், ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் காணப்படுகிறது.

செடியின் அமைவு[தொகு]

ஆல்டிரோவேண்டா அமைதியான, தேக்கமாயிருக்கும் நீரில் வாழும் ஒரு சிறு பூண்டு. நீர் மட்டத்திற்குச் சற்றுக் கீழே மிதந்து கொண்டிருக்கும். இது 10-15 செ.மீ. நீளமுள்ளது. இதற்கு வேரில்லை. தண்டு மிகவும் மெல்லியது. ஆதிகமான கிளைகள் விடுவதில்லை. இலைகள் கொத்து கொத்தாக இருக்கும். ஒவ்வொரு கணுவிலும் எட்டு இலைகள் ஒரு வட்டமாக அமைந்திருக்கும். ஒவ்வொரு இலையும் ஒரு கரண்டி போன்ற அமைப்பு கொண்டது. இலைக்காம்பு சிறகுபோல் விரிந்து இருக்கும். இதன் இலையின் அலகு நடு நரம்பின் நீளத்தில் மடங்கக் கூடிய இரண்டு பகுதிகளை கொண்டிருக்கும். இதன் விளிம்பு உள்நோக்கி லேசாக வளைந்தும், சிறு சிறு பற்களும் கொண்டிருக்கும். இலையின் நடு நரம்பை ஒட்டி பல உணர்ச்சியுள்ள மயிர்கள் இருக்கின்றன. குறிப்பாக இவை 6 மட்டுமே காணப்படும்.

பூச்சிகளை உண்ணும் முறை[தொகு]

நீரில் நீந்திச் செல்லும் சிறு பூச்சிகள் மற்றும் லார்வா இந்த மயிர்களின்மேல் பட நேர்ந்தால் இலையின் இரு பகுதிகளும் உடனே மூடிக்கொள்ளும். முற்றிலும் ஒன்றாக செர்ந்து கொள்வதில்லை. சற்று இடைவெளியிருக்கும். இலையின் உள்பகுதியில் நீண்ட காம்புடன் கூடிய சீரண சுரப்பிமுடிகள் உள்ளன. இந்த சுரப்பிகளிலிருந்து உண்டாகும் திரவத்தில் அவை செரிமானமாகிவிடும். உணவுப் பொருள் இலைக்குள் உறிஞ்சிக் கொள்ளப்படும்.

பூக்கள் இலைக்காம்பின் அருகில் வருகின்றன. பூக்களுக்கு சிறு காம்புகளுண்டு. புறவிதழ்கள் 5 பிரிவுகளாக இருக்கும். அகவிதழ்களும் கேசரங்களும் அதே எண்ணிக்கையில் இருக்கும். சூலகம் ஓரறையுள்ளது. விதைகள் கணக்கற்றுக் காணப்படும்.

இத்தாவரம் தென் கல்கத்தாவின் உப்பு நீர் பகுதியில் காணப்படுகிறது. இது இந்தியாவில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில் உள்ளது. இது அழிந்து வரும் தாவரப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது பிறர் தொல்லைக்கு ஆளாகி அழிந்து வருகிறது. கல்கத்தா நகரம் விரிவு ஆக்கப்படும்போது குட்டைகள் மூடப்படுகிறது. இந்த குட்டைகளில் வளரும் இத்தாவரம் அழிக்கப்படுகிறது.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

[1]

  1. சிறிதும் - பெரியதும். அறிவியல் வெளியீடு. http://books.google.com/books/about/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF.html?id=vKXyPAAACAAJ. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்டிரோவேண்டா&oldid=2899598" இருந்து மீள்விக்கப்பட்டது