ஆல்க்கைல்பீனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆல்க்கைல்பீனாலின் வேதிக் கட்டமைப்பு, (நோனைல்பீனால்)

ஆல்க்கைல்பீனால்கள் (Alkylphenols) என்பவை பீனால்களை ஆல்க்கைலேற்றம் செய்வதால் உருவாகும் கரிமச் சேர்மங்களைக் கொண்ட ஒரு குழுவாகும். பொதுவாக புரோப்பைல்பீனால், பியூட்டைல்பீனால், அமைல்பீனால், எப்டைல்பீனால், ஆக்டைல்பீனால், நோனைல்பீனால், டோடெசைல்பீனால் மற்றும் இவற்றுடன் தொடர்புடைய நீண்ட சங்கிலி ஆல்க்கைல்பீனால்களைக் குறிப்பிட ஆல்க்கைல்பீனால் என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. மெத்தில்பீனால்களும் எத்தில்பீனால்களும் ஆல்க்கைல்பீனால்களேயாகும். ஆனால் அவற்றை முறையே கிரெசால்கள், சைலினால்கள் என்ற தனிப்பெயர்களால் அழைக்கிறார்கள்[1].

தயாரிப்பு[தொகு]

பீனாலுடன் ஆல்க்கீன்களைச் சேர்த்து ஆல்க்கைலேற்றம் செய்தால் நீண்ட சங்கிலி ஆல்க்கைல்பீனால்கள் உருவாகின்றன[1].

C6H5OH + RR'C=CHR" → RR'CH−CHR"−C6H4OH

நோனைல்பீனால் குறித்த விவாதங்கள்[தொகு]

ஆல்க்கைல்பீனால்கள் செனோயீசுட்ரோகென்களாக கருதப்படுகின்றன [2]. வெளிப்புற பெண்மை இயக்குநீரே செனோயீசுட்ரோகென் எனப்படுகிறது. ] ஐரோப்பிய ஒன்றியமானது, குறிப்பாக நோனைல்பீனால் பயன்படுத்தப்படும் பொருட்களின் மீதான விற்பனை மற்றும் பயன்பாட்டுக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தியுள்ளது. அவற்றின் நச்சுத்தன்மை, நிலைத்தன்மை, உயிர்வழிப்பெருக்கம் போன்ற காரணிகள் போன்றவை இதற்கான காரணங்களாகும். ஆனால் அமெரிக்காவில் ஆல்க்கைல்பீனால்களின் அறிவியலைப் புரிந்துகொள்ள முயலும் நடவடிக்கையே மேற்கொள்ளப்படுகிறது [3].

நீண்ட சங்கிலி ஆல்க்கைல்பீனால்களின் பயன்கள்[தொகு]

நீண்ட சங்கிலி ஆல்கைல்பீனால்கள் துப்புரவாக்கிகள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மங்களாக பயன்படுத்தப்படுகின்றன. எரிபொருள்கள் மற்றும் உயவுப்பொருட்களின் சேர்க்கைப்பொருளாகவும், பலபடிகள் மற்றும் பீனாலிக் பிசின்களின் பகுதிக்கூறுகளாகவும் இவை உள்ளன. வாசனை திரவியங்கள், வெப்பம் இளகுமீள்மங்கள் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகள், எண்ணெய்வயல் இரசாயனங்கள் மற்றும் தீ தடுப்புப்பொருட்கள் ஆகியனவற்றைத் தயாரிக்கப் பயன்படுகின்றன. ஆல்க்கைல்பீனாலிக் பிசின்களை உருவாக்குவதன் மூலம் டயர்கள், ஒட்டுப்பசைகள், பூச்சுகள், கார்பனற்ற காகிதங்கள் மற்றும் உயர் செயல்திறன் ரப்பர் தயாரிப்புகள் போன்றவற்றிலும் இவை பயன்படுகின்றன. 40 வருடங்களுக்கும் மேலாக தொழிற்துறையில் ஆல்க்கைல்பீனால்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த அயலுயிரி சேர்மங்கள் பலவீனமான அளவில் நாளமில்லா சுரப்பிகளைப் பாதிப்பதாக கருதப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Helmut Fiege, Heinz-Werner Voges, Toshikazu Hamamoto, Sumio Umemura, Tadao Iwata, Hisaya Miki, Yasuhiro Fujita, Hans-Josef Buysch, Dorothea Garbe, Wilfried Paulus "Phenol Derivatives" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2002, Wiley-VCH, Weinheim.எஆசு:10.1002/14356007.a19_313.
  2. Kochukov, Y.; Jeng, J.; Watson, S. (May 2009). "Alkylphenol xenoestrogens with varying carbon chain lengths differentially and potently activate signaling and functional responses in GH3/B6/F10 somatomammotropes". Environmental Health Perspectives 117 (5): 723–730. doi:10.1289/ehp.0800182. பன்னாட்டுத் தர தொடர் எண்:0091-6765. பப்மெட்:19479013. 
  3. European Bans on Surfactant Trigger Transatlantic Debate
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்க்கைல்பீனால்&oldid=2284724" இருந்து மீள்விக்கப்பட்டது