ஆல்ஃபா (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆல்ஃபா
Alpha
இயக்கம்ஆல்பர்ட் ஹ்யூஸ்
தயாரிப்பு
 • ஆல்பர்ட் ஹ்யூஸ்
 • ஆண்ட்ரூ ரோனா
திரைக்கதைடானியேல் செபாஸ்டியன் வைடென்ஹூப்ட்
இசைஜோசப் எஸ். டீபிஸி
நடிப்பு
 • கோடி ஸ்மித், ஜென்ஸ் ஹல்டன்
ஒளிப்பதிவுமார்ட்டின் ஜிசல்ட்
படத்தொகுப்புசாண்ட்ரா கிரானோவ்ஸ்கி
கலையகம்
விநியோகம்சோனி பிக்சர்ஸ் ரிலேசிங்[1]
வெளியீடுஆகத்து 17, 2018 (2018-08-17)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

ஆல்ஃபா (Alpha) என்பது வெளிவர இருக்கும் அமெரிக்க நாடக சாகசத் திரைப்படமாகும். ஆல்பர்ட் ஹ்யூஸ் எழுதிய கதைக்கு, டானியேல் செபாஸ்டியன் வைடென்ஹூப்ட்  திரைக்கதை எழுத, ஆல்பர்ட் ஹ்யூஸ் இயக்கியுள்ளார்.  இப்படத்தில் கோடி ஸ்மித், லியோனர் வரெலா, ஜென்ஸ் ஹல்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். துணைக் கதாபாத்திரங்களாக இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்டவரும் கனடா நடிகையுமான பிரியா ராஜரத்தினம் வருகிறார். இப்படமானது பனி யுகத்தின் போது ஒரு இளம் வேட்டைக்காரனையும் அவனது நண்பனான காயமடைந்த ஓநாயையும் கதை பின்தொடர்கிறது. இது சோனி பிக்சர்சால் அமெரிக்காவில் 2018 ஆகத்து 17 அன்று வெளியிடப்பட்டது.

கதை[தொகு]

20000  ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் பனி யுகம் இருந்த காலத்தில் படத்தின் கதை நடக்கிறது. பதின்ம வயதை நிறைவுசெய்யும் வயதில் இருக்கும் ஒரு இளைஞன் காட்டெருது வேட்டைக்கு தன் குழுவோடு போகிறான். அங்கே அந்தக் குழுவிலிருந்து தொலைந்து போகும் அவன் ஒரு விபத்தில் காயமடைந்து சாவை எதிர்நோக்கி இருக்கிறான். இந்நிலையில், அதே போன்ற நிலையில் இருக்கும் ஓர் ஓநாயைச் சந்திக்கிறான். இயல்பில் தனது எதிரியான ஓநாயை, அந்தக் கடின நிலை காரணமாக நண்பனாக மாற்றுகிறான்.  தனது தந்தையின் தாரகமந்திரமான ‘தலைவன் இல்லாதபோது அவனாக நீயே மாறு’ என்ற சொல்லைப் பின்பற்றி நடைபோடுகிறான். வழியில் கொடூர விலங்குகள், கடுங்குளிர் காலத்தின் தொடக்கம், அபாயகரமான நில அமைப்பு என அடுத்தடுத்த சவால்களை புது நண்பன் உதவியுடன் எதிர்கொண்டு தனது இருப்பிடத்துக்குத் திரும்பும் சாகசமே படத்தின் கதையாகும்.[2][3]

நடிகர்கள்[தொகு]

 • கேடாவாக கோடி ஸ்மித்
 • ஷமானாக லியோனர் வரெலா
 • ஜீயாக ஜென்ஸ் ஹல்டென்
 • டவ்வாக ஜொஹானேஸ் ஹக்கூர் ஜொஹானெசன்

தயாரிப்பு[தொகு]

வளர்ச்சி[தொகு]

இந்தப் படம் 2015 செப்டம்பர் 15 அன்று முதன்முதலாக அறிவிக்கப்பட்டது, ஆல்பர்ட் ஹ்யூஸ் இயக்குனராக உறுதிப்படுத்தப்பட்டார். இதை ஸ்டுடியோ 8 என்ற தயாரிப்பு நிறுவனத்தால்  ஐமாக்ஸ் 3டி வடிவமைப்பில் தயாரிக்கப்படுகிறது. 2016 பிப்ரவரி 19 அன்று நடிகர்கள் இறுதி செய்யப்பட்டனர்.[4] கோடி ஸ்மிட்-மேக்ஃபி 2015 நவம்பர் 12 இல் நடிக்க இருப்பதாக உறுதிசெய்யப்பட்டது.[5]

படப்பிடிப்பு[தொகு]

படத்தின் படப்பிடிப்பானது வான்கூவர் மற்றும் டிரம்ஹெல்லர் ஆகிய பகுதிகளில் நடந்தது.[6] வான்கூவரின் கிழக்கு கென்ட் அவென்யூக்கு அருகே ஒரு எல்லைப்புற சாலையில் பெரிய செட்டிங்குகள் அமைக்கப்பட்டன.சில காட்சிகள் பர்னாபை நகரில் நடந்தன. பின்னர் ஐஸ்லாந்தில் படப்பிடிப்புகள் நடந்தன.[7] வன்கூவரில் 2016 பிப்ரவரி 22 இல் தொடங்கிய படப்பிடிப்பானது, மே 20 அன்று முடிவடைந்தது.  2016 ஏப்ரல் மாதத்தில் கனடாவின் பாட்ரிசியா ஆல்பர்டாவுக்கு அருகிலுள்ள டைனோசர் மாகாண பூங்காவில் படப்பிடிப்பு நடந்தது.[8]

படத் தயாரிப்பிற்காக ஐந்து ஆல்பர்ட்டா காட்டெருதுகள் கொல்லப்பட்டதாக விசாரணை செய்யப்பட்டது.[9]

வெளியீடு[தொகு]

2017 சூனில் படத்தின் பெயரானது தி சாலட்டிரியன் என்பதிலிருந்து ஆல்ஃபா என்று மாற்றப்பட்டது.  2017 செப்டம்பரில் வெயிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட படத்தின் வெளியீடு பின்னர்,  2018 மார்ச் 2 அன்று வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 2017 திசம்பருக்கு ஒத்திவைக்கப்பட்ட வெயீட்டுத் தேதி,  2018 செப்டம்பர் 14க்கு ஒத்திவைக்கப்பட்டது.[10] மீண்டும் வெளியாட்டுத் தேதியாக 2018 ஏப்ரல் என்று அறிவிக்கப்பட்டு, பின்னர் அதுவும் மாற்றப்பட்டு கடைசியாக 2018 ஆகத்து 17 வெளியானது.[11]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 "Film releases". Variety Insight. பார்த்த நாள் September 12, 2017.
 2. Lang, Brent (June 16, 2017). "'Solutrean' Retitled 'Alpha,' Gets New Release Date (EXCLUSIVE)". Variety.
 3. Fleming Jr, Mike (September 15, 2015). "Jeff Robinov's First Studio 8-Hatched Film: Albert Hughes-Directed Ice Age Survival Tale 'Solutrean'". Deadline Hollywood.
 4. Busch, Anita (February 19, 2016). "Albert Hughes' Ice Age Epic 'The Solutrean' Gets Rolling For Studio 8". Deadline Hollywood.
 5. White, James (November 12, 2015). "Kodi Smit-McPhee starring in The Solutrean". Empire.
 6. Kolafa, Pat (April 30, 2016). "Ice age epic filmed near Hoodoos". The Drumheller Mail.
 7. "The Solutrean Starts Filming in Vancouver This Week" (February 22, 2016).
 8. "What's filming in Vancouver right now" (February 3, 2016).
 9. Rieger, Sarah (June 27, 2016). "'The Solutrean' Under Investigation After 5 Alberta Bison Were Allegedly Killed". Huffington Post. பார்த்த நாள் July 31, 2016.
 10. D'Alessandro, Anthony (December 28, 2017). "Sony Moves 'Alpha' To Fall, Bumps 'Goosebumps 2' To October". Deadline Hollywood. பார்த்த நாள் December 29, 2017.
 11. D'Alessandro, Anthony (April 10, 2018). "'Alpha' & 'White Boy Rick' Swap Release Dates On Sony Schedule". Deadline Hollywood. பார்த்த நாள் April 10, 2018.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்ஃபா_(திரைப்படம்)&oldid=2906918" இருந்து மீள்விக்கப்பட்டது