ஆலெக்சு செயல்முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலெக்சு செயல்முறை (Halex process) வேதியியலில் அரோமாட்டிக் குளோரைடுகளை அவற்றுடன் தொடர்புடைய அரோமாட்டிக் புளோரைடுகளாக மாற்ற உதவுகிறது. வினையில் ஆலைடுகள் பரிமாறப்படுவதால் இப்பெயர் உருவாக்கப்பட்டது. [1] இருமெத்தில்சல்பாக்சைடு மற்றும் நீரற்ற பொட்டாசியம்புளோரைடில் உள்ள அரைல் குளோரைடு கரைசலை 150-250 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கும் நடைமுறை இவ்வினையில் பின்பற்றப்படுகிறது. பொட்டாசியம் குளோரைடு இவ்வினையில் உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக நைட்ரோ குழு பதிலீடு செய்யப்பட்ட அரைல் குளோரைடுகள் ஆலெக்சு செயல்முறையில் பயன்படுத்தப்படுகின்றன.

இதே செயல்முறையில் பின் வரும் வேதிவினைகள் வணிகமுறையில் பின்பற்றப்படுகின்றன. [2]

1-குளோரோ-2-நைட்ரோபென்சீன் → 1-புளோரோ-2-நைட்ரோபென்சீன்
1-குளோரோ-4-நைட்ரோபென்சீன் → 1-புளோரோ-4-நைட்ரோபென்சீன்
1,2-இருகுளோரோ-4- நைட்ரோபென்சீன் → 1-குளோரோ-2-புளோரோ-5- நைட்ரோபென்சீன்
1,4-இருகுளோரோ-2-நைட்ரோபென்சீன் → 1-குளோரோ-4-புளோரோ-3- நைட்ரோபென்சீன்
1-குளோரோ-2,4- இருநைட்ரோபென்சீன் → 1-புளோரோ-2,4- இருநைட்ரோபென்சீன்
5-குளோரோ-2-நைட்ரோபென்சோமுப்புளோரைடு → 5-புளோரோ-2-நைட்ரோபென்சோமுப்புளோரைடு
1,3-இருகுளோரோ-4- நைட்ரோபென்சீன் → 1,3-இருபுளோரோ-4- நைட்ரோபென்சீன்
2,6-இருகுளோரோபென்சோநைட்ரைல் → 2,6-இருபுளோரோபென்சோநைட்ரைல்

மேற்கோள்கள்[தொகு]

  1. Furuya, Takeru; Klein, Johannes E. M. N.; Ritter, Tobias (2010). "C–F Bond Formation for the Synthesis of Aryl Fluorides". Synthesis: 1804–1821. doi:10.1055/s-0029-1218742. 
  2. Siegemund, Günter; Schwertfeger, Werner; Feiring, Andrew; Smart, Bruce; Behr, Fred; Vogel, Herward; McKusick, Blaine (2005), "Fluorine Compounds, Organic", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a11_349.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலெக்சு_செயல்முறை&oldid=3308337" இலிருந்து மீள்விக்கப்பட்டது