உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலிவர் மார்க்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலிவர் மார்க்ஸ்
Oliver Marks
நெகிரி செம்பிலான் பிரித்தானிய முதல்வர்
பதவியில்
1894–1896
பேராக் மாநிலத்தின்
பிரித்தானிய முதல்வர்
பதவியில்
15 திசம்பர் 1911  9 ஆகத்து 1912
சிலாங்கூர் மாநிலத்தின்
பிரித்தானிய முதல்வர்
பதவியில்
1920–1922
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு10 செப்டம்பர் 1866
இறப்பு24 மே 1940
தேசியம்பிரித்தானியர்
பணிகுடியேற்ற நிர்வாகி

ஆலிவர் மார்க்ஸ் (Oliver Marks); KCMG; (10 செப்டம்பர் 1866 – 24 மே 1940) என்பவர் பிரித்தானிய குடியேற்ற நிர்வாகி; ஐக்கிய இராச்சியத்தின் முதல் வகுப்பு துடுப்பாட்டக்காரர் ஆவார்.[1][2][3][4]

மலாயாவில் ஏறக்குறைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக பலவேறு அரசு பதவிகளை வகித்தார்; நெகிரி செம்பிலான் பிரித்தானிய முதல்வர் (1894 – 1896); பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர் (15 திசம்பர் 1911 – 9 ஆகத்து 1912); சிலாங்கூர் பிரித்தானிய முதல்வர் (1920 – 1922) பதவிகளை வகித்துள்ளார்.

வாழ்க்கை

[தொகு]

செப்டம்பர் 1866-இல் இங்கிலாந்தின் சர்ரேயில் (Surrey) பிறந்த அவர், தன் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு, பிரித்தானிய இலங்கைக்குச் சென்றார்.[5] 1887 முதல் 1891 வரை தேயிலைத் தோட்டக்காரராகப் பணிபுரிந்தார். அங்கிருந்து அவர் பிரித்தானிய மலாயாவுக்குச் சென்றார். அங்கு பேராக் மாநிலத்தில் மலாயா அரசாங்கத்திற்குச் சொந்தமான ஒரு தோட்டத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றினார்.

பதவிகள்

[தொகு]

1894- ஆம் ஆண்டு மலாயா அரசு நிர்வாகப் பணியில் சேர்ந்தார். நெகிரி செம்பிலான் பிரித்தானிய முதல்வராக நியமிக்கப்படுவதற்கு முன்பு பல பதவிகளை வகித்தார். 1896 வரை உதவி நீதி அதிகாரியாக (மாஜிஸ்திரேட்) இருந்தார். அதன் பிறகு பேராக் மாநில அரசாங்கத்தின் உதவிச் செயலாளராகப் பொறுப்பேற்றார். 1898 வரை இந்தப் பதவியை வகித்தார்.

1898 முதல் 1903 வரை. மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் ஆளுநரின் உதவிச் செயலாளராகவும் சேவை செய்துள்ளார். பின்னர் மலாயாவின் ஐக்கிய இராச்சிய ஆணையர்களின் செயலாளராகவும்; நீரிணை குடியேற்றங்களின் ஆளுநரின் தனியார் செயலாளராகவும் பணியாற்றினார்.[6]

பேராக் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வர்

[தொகு]

1914 ஆம் ஆண்டு, அவர் பேராக் மாநிலத்தின் தற்காலிக பிரித்தானிய முதல்வராக பணியில் அமர்த்தப்பட்டார். அந்தக் காலக் கட்டத்தில்தான் அவர் தைப்பிங் செயிண்ட் ஜார்ஜ் உயர்நிலப்பள்ளிக்கும் (St. George's Institution) அடிக்கல் நாட்டினார். 1920-களில், அவர் சிலாங்கூர் மாநிலத்தின் பிரித்தானிய முதல்வராக பொறுப்பு வகித்தார். 1922-ஆம் ஆண்டு அவரின் காலனிய சேவைகளுக்காக செயிண்ட் மைக்கெல் செயிண்ட் ஜார்ஜ் விருது (Order of St Michael and St George) வழங்கப்பட்டது.[7]

பிற்கால வாழ்க்கையில் மார்க்ஸ், பிரித்தானிய மலாயா சங்கத்தின் செயலாளராகச் சேவை செய்துள்ளார்.[8] அவர் மே 1940-இல் இங்கிலாந்து, புரோம்ப்டன் நகரில் (Brompton) 77-ஆவது வயதில் காலமானார்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Who Was Who (in ஆங்கிலம்). Vol. 3. A & C Black. 1929. p. 902.
  2. "Miscellaneous Matches played by Oliver Marks". CricketArchive. Retrieved 2021-10-14.
  3. "First-Class Matches played by Oliver Marks". CricketArchive. Retrieved 2021-10-14.
  4. "London County v Marylebone Cricket Club, 1901". CricketArchive. Retrieved 2021-10-14.
  5. Wright, Arnold; Cartwright, H. A. (1908). Twentieth century impressions of British Malaya: its history, people, commerce, industries, and resources;. London, Durban, Colombo, Perth (W. A.), Singapore, Hongkong, and Shanghai, Lloyd's Greater Britain Publishing Company, limited. p. 124.
  6. Kratoska, Paul H. (1893). Honourable Intentions (in ஆங்கிலம்). Oxford University Press. pp. 441–2, 454. ISBN 9780195825480.
  7. "No. 32563". இலண்டன் கசெட் (Supplement). 30 December 1921. p. 10714.
  8. Sir Hugh Clifford. The Scotsman. 1 December 1928. p. 10


கூடுதல் சான்றுகள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலிவர்_மார்க்ஸ்&oldid=4427281" இலிருந்து மீள்விக்கப்பட்டது