ஆலிடே தீவு வனவிலங்கு சரணாலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆலிடே தீவு வனவிலங்கு சரணாலயம் (Haliday Island Wildlife Sanctuary) இந்தியாவில் காணப்படும் பல வனவிலங்கு சரணாலயங்களில் ஒன்றாகும். ஆலிடே வனவிலங்கு சரணாலயம் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். மேற்கு வங்காள மாநிலத்தில் சுமார் 6 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த வனவிலங்கு சரணாலயம் அமைந்திருக்கிறது. இச்சரணாலயம் சுந்தரவனக் காடுகள் உயிகோளக் காப்பகத்தின் ஒரு பகுதியாகும் [1]. 1989 ஆம் ஆண்டில் சுந்தரவனக்காடு மண்டலம் முழுவதும் அதிகாரப்பூர்வமாக உயிகோளக் காப்பகமாக மாறியது. இங்குள்ள வனவிலங்கு மிகுந்த பகுதிகள் யாவும் சுற்றுச்சூழல் மனப்பான்மையுடைய சுற்றுலாத்தலமாக கருதப்படுகின்றன. மேற்கு வங்காளத்தில் பாயும் மட்லா நதியின் கரையில் இச்சரணாலயம் அமைந்துள்ளது [1][2].

பலவிதமான தாவர வகைகள் மற்றும் வனவிலங்கு வகைகள் ஆலிடே சரணாலயத்தில் உள்ளன. காட்டுப்பன்றி மற்றும் புள்ளி மான்கள் ஆகியவற்றை இங்குள்ள விலங்கு வகைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகக் கூறலாம். வங்கப்புலிகள் எப்போதாவது இந்த பகுதிக்கு வந்து போகின்றன [1].

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]