உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலாம் இம்பியான்

ஆள்கூறுகள்: 3°1′22.32″N 101°30′38.34″E / 3.0228667°N 101.5106500°E / 3.0228667; 101.5106500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலாம் இம்பியான்
Alam Impian
ஆலாம் இம்பியான் ஏரிப் பூங்கா
ஆலாம் இம்பியான் ஏரிப் பூங்கா
ஆள்கூறுகள்: 3°1′22.32″N 101°30′38.34″E / 3.0228667°N 101.5106500°E / 3.0228667; 101.5106500
நாடு மலேசியா
மாநிலம் சிலாங்கூர்
மாவட்டம்சா ஆலாம்
நிர்வாக மையம்சா ஆலாம்
உருவாக்கம்2006
அரசு
 • ஊராட்சிசா ஆலாம் மாநகராட்சி
நேர வலயம்மலேசிய நேரம் 08:00
அஞ்சல் குறியீடு
40470[1]
தொலைபேசி+603-
போக்குவரத்துB
இணையதளம்mpks.gov.my
Map

ஆலாம் இம்பியான், (மலாய்; ஆங்கிலம்: Alam Impian; சீனம்: 梦境) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தின், சா ஆலாம் மாநகர்ப் பகுதியில் உள்ள ஒரு நகரியம் ஆகும். தாமான் செரி மூடா அருகே அமைந்துள்ள இந்த நகரியம் சா ஆலாம் பிரிவு 25 என்றும் அழைக்கப்படுகிறது.

சா ஆலாம் மாவட்டத்தில் ஒரு முக்கியமான இடத்தில் அமைந்துள்ள இந்த நகரியம் 1,235 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது; மற்றும் சா ஆலாம் நகர மையத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த நகரியம் இரட்டை மாடி ஓரடுக்கு மனைகள் மற்றும் பிரிக்கப்பட்ட அரைமாடி மனைகளைக் கொண்டுள்ளது.[2]

பொது

[தொகு]

இந்த நகர்ப்பகுதி நவம்பர் 2006-இல், எஸ்பி கட்டுமானக் குழுமத்தின் (SP Setia) கீழ் தொடங்கப்பட்டது.[3] சுவரெழுத்துகளைக் கொண்ட சுவர்கள், ஒரு கலைக்கூடம், நேரியல் பூங்காக்கள், ஒரு திறந்தவெளி அரங்கம், தெரு ஓவியம், 31 ஏக்கர் (13 எக்டேர்) பரப்பளவில் ஒரு மைய நகரத்தையும் இந்த நகரியம் கொண்டுள்ளது.[4][5]

போக்குவரத்து

[தொகு]

ஆலாம் இம்பியான் நகர்ப்பகுதியை இணைக்கும் நெடுஞ்சாலைகள்; மற்றும் விரைவுச்சாலைகள்:

2 கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை (FH2)
E5 சா ஆலாம் விரைவுச்சாலை (KESAS) 506
E6 மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (ELITE)
E13 கெமுனிங்-சா ஆலாம் விரைவுச்சாலை (LKSA)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Alam Impian, Shah Alam - Postcode - 40470 - Malaysia Postcode". postcode.my. Retrieved 3 November 2025.
  2. "AlamImpian. Located strategically in Shah Alam, this freehold township spans 1,235 acres and is just 8 km from the city center. Featuring double-storey terraces and semi-detached homes". S P Setia Staging. Retrieved 3 November 2025.
  3. "SP Setia unveils Aria freehold housing project". The Star (Malaysia). 13 August 2020 இம் மூலத்தில் இருந்து 20 October 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20201020124025/https://www.thestar.com.my/business/business-news/2020/08/13/sp-setia-unveils-aria-freehold-housing-project. 
  4. "S P Setia unlocks value at Setia AlamImpian with new LakePoint Complex". The Edge (Malaysia). 26 February 2024 இம் மூலத்தில் இருந்து 22 April 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240422205603/https://theedgemalaysia.com/content/advertise/sp-setia-unlocks-value-detia-alamimpian-new-lakepoint-complex. 
  5. "S P Setia’s Setia AlamImpian Reveals Modern Double-Storey Terrace Homes Ferrous 3". iproperty.com.my. 7 August 2024. https://www.iproperty.com.my/news/s-p-setias-setia-alamimpian-reveals-modern-double-storey-terrace-homes-ferrous-3-95596. 

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
  • Alam Impian
  • விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Shah Alam
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலாம்_இம்பியான்&oldid=4398914" இலிருந்து மீள்விக்கப்பட்டது