ஆலாபனை (கவிதை நூல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆலாபனை சாகித்ய அகாதமி விருது பெற்ற இக்கவிதை நூலின் ஆசிரியர் அப்துல் ரகுமான். நாற்பத்தோரு தலைப்பின் கீழ் கவிதைகள் உள்ளன. 'பாக்யா' இதழில் இக்கவிதைகள் தொடராக வெளி வந்தபோதே வாசகர்களின் வரவேற்பைப் பெற்றிருந்தது. மணியிம் செல்வம், கவிதைக் களங்களுக்கான ஓவியங்ளை வரைந்துள்ளார். இக்கவிதை நூலிற்கு கவிஞர் கண்ணதாசன் முகப்புறை எழுதியுள்ளார். அதில் கலீல் ஜிப்ரானைப் படிக்கும் போதெல்லாம் தமிழில் இப்படி எழுத யாருமில்லையே என்று ஏங்கியதாகவும் அந்த ஏக்கம் இப்போது இல்லை எனவும் குறிப்பிடுகிறார். அப்துல் ரகுமானின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டால், யார் இந்தக் கவிஞன் என்று உலகம் நிச்சயம் விசாரிக்கும்? என்றும் தனது முகப்புரையில் குறிப்பிடுகிறார்.

நூலின் உள்ளே[தொகு]

'இழந்தவர்கள்' என்ற கவிதையில் 'குளிர் காய சுள்ளி பொறுக்கத் தொடங்கினாய், சுள்ளி பொறுக்குவதிலேயே உன் ஆயுள் செலவாகிக் கொண்டிருக்கிறது, நீ குளிர் காய்வதே இல்லை' என மனித வாழ்கையின் வெற்று ஓட்டத்தைப் பற்றி குறிப்பிடுகிறார். 'ஆறாத அறிவு' என்ற கவிதையில், அதன் தலைபிலேயே மனிதனின் ஆறாவது அறிவே அவனின் ரணம் என்பதை குறிப்பிட்டுவிடுகிறார். உயிரினங்களில் மனிதன் மட்டும்தான் கவலைப்படுகிறான். ஆறாவது அறிவு என்பது அவன் சுமக்கும் சிலுவையா? என வினவுகிறார். 'மானுடத்தின் திருவிழா' என்ற கவிதையில், மனிதன் பல்வேறு வரையரைகளால் கட்டப்பட்டிருப்பதாகக் கூறுகிரார். இலக்கணத்திற்கு அப்பால் இருக்கிறது அழகு என்கிறார். 'வெற்றி' என்ற கவிதையில், தோல்வியைக் கொண்டாடுகிறார். தோல்வியே! நீதான் நாம் சம்பாதிக்கும் பணம், வெற்றியைக் கூட அதனால் வாங்க முடியும் என்கிறார். 'அதுதான்' என்ற கவிதையில், கடைசிப் பக்கங்கள் கிழிந்து போன துப்பறியும் நவீனத்தைத் தெரியாமல் எடுத்துப் படித்திருக்கிறீர்களா? அதுதான் வாழ்க்கை என்கிறார். நதி நீரின்றி வறண்டு கிடந்தாலும் நதி என்றே அழைக்கப்படுவதை அறிந்திருக்கிறீர்களா? என்கிறார்

சான்று[தொகு]

ஆலாபனை- ஆசிரியர் அப்துல் ரகுமான், ஏழாவது பதிப்பு, வெளியீடு நேஷனல் பப்ளிஷர்ஸ், சென்னை - 17

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலாபனை_(கவிதை_நூல்)&oldid=2723353" இருந்து மீள்விக்கப்பட்டது