ஆலம்பூர், ஜோகுலம்பா, ஆந்திரா

ஆள்கூறுகள்: 15°52′41″N 78°07′55″E / 15.878°N 78.132°E / 15.878; 78.132
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலம்பூர்
வட்டம்
ஆலம்பூரின் சங்கமேசுவரர் கோயில்
ஆலம்பூரின் சங்கமேசுவரர் கோயில்
ஆலம்பூர் is located in தெலங்காணா
ஆலம்பூர்
ஆலம்பூர்
தெலங்காணாவில் அமைவிடம்
ஆலம்பூர் is located in இந்தியா
ஆலம்பூர்
ஆலம்பூர்
ஆலம்பூர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 15°52′41″N 78°07′55″E / 15.878°N 78.132°E / 15.878; 78.132
நாடு இந்தியா
மாநிலம்தெலங்காணா
மாவட்டம்ஜோகுலம்பா கத்வால்
ஏற்றம்269 m (883 ft)
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்9,350
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
இணையதளம்telangana.gov.in

ஆலம்பூர் (Alampur) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் ஜோகுலம்பா கத்வால் மாவட்டத்தில்[1] [2] அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். ஆலம்பூர் சாக்த சமயத்தில் ஒரு பிரபலமான இந்து புனித யாத்திரைத் தளமாகத் திகழ்கிறது. மேலும் இது நவபிரம்மா கோயில்களின் தாயகமாகவும் உள்ளது.[3] . இது கி.பி. ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட சிவனுக்காக[4] அர்ப்பணிக்கப்பட்ட ஒன்பது கோயில்களைக் கொண்டுள்ளது. துங்கபத்திரை, கிருஷ்ணா ஆகிய ஆறுகள் சந்திக்கும் இடமான இது தட்சிண காசி என்றும் ஸ்ரீசைலத்தின் மேற்கு நுழைவாயிலாகவும் கருதப்படுகிறது. ஆலம்பூரின் புனிதம் கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது நல்லமலா மலைகளால் சூழப்பட்டுள்ளது. இது துங்கபத்திரை ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. ஆலம்பூர் பாதமி சாளுக்கியர்களால் ஆளப்பட்டது. அவர்கள் 9 சிவன் கோயில்களைக் கட்டினார்கள். அவர்களுக்குப் பிறகு மல்கெடாவின் இராஷ்டிரகூடர்களும் கர்நாடகாவின் மேலை சாளுக்கியர்களும் பாபநாசி கோயில்களைக் கட்டினார்கள். ஆலம்பூர் நூற்றுக்கணக்கான பழைய கன்னட கல்வெட்டுகளின் தாயகமாக உள்ளது. ஏனெனில் இது பாதமி சாளுக்கியர்கள், மல்கெடாவின் இராஷ்டிரகூடர்கள், மேலைச் சாளுக்கியர்கள் போன்ற கன்னடிக வம்சங்களால் ஆளப்பட்டது. ஆலம்பூரில் ஏராளமான இந்து கோவில்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை ஜோகுலம்பா கோவில், நவபிரம்மா கோவில்கள், பாபநாசி கோயில்கள், சங்கமேசுவரர் கோயில் போன்றவை சில குறிப்பிடத்தக்கவை.

ஜோகுலம்பா கோயில் பதினெட்டு மகா சக்தி பீடங்களில் ஒன்றாகும். இவை சக்தியின் மிக முக்கியமான புனிதத் தலங்களாகவும், யாத்திரைத் தலங்களாகவும் கருதப்படுகிறது. இது கி.பி. ஏழாம் மற்றும் எட்டாம் நூற்றாண்டுகளில் பாதமி சாளுக்கியர்களால் கட்டப்பட்ட சிவனுக்காக[4] அர்ப்பணிக்கப்பட்ட ஒன்பது கோயில்களைக் கொண்டுள்ளது. நவபிரம்மா கோவில்கள் தொல்லியல் மற்றும் கட்டிடக்கலை பொக்கிசமாக இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் அதிகாரப்பூர்வ "நினைவுச் சின்னங்களின் பட்டியலில்" பட்டியலிடப்பட்டுள்ளன.[5] பாபநாசி கோயில்கள் என்பது ஆலம்பூருக்கு தென்மேற்கே 2.5 கிமீ (1.6 மைல்) தொலைவில் உள்ள பாபநாசி கிராமத்தில் அமைந்துள்ள 9-ம் மற்றும் 11-ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட இருபத்தி மூன்று இந்துக் கோயில்களின் குழுவாகும். பாபநாசி கோயில்கள் சைவ பாரம்பரியத்தின் நவபிரம்ம கோயில்களுக்கு அருகில் உள்ளன. ஆனால் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இராஷ்டிரகூடர்களாலும், மேற்கு சாளுக்கியர்களாலும் கட்டப்பட்டது.

வரலாறு[தொகு]

ஆலம்பூர், சாதவாகனர்கள், நாகார்ஜுனகொண்டாவின் இச்வாகுகள், பாதமி சாளுக்கியர்கள், இராஷ்டிரகூடர்கள், கல்யாணி சாளுக்கியர்கள், காகத்தியர்கள், விஜயநகரப் பேரரசு ,கோல்கொண்டாவின் குதுப் சாகிகள் ஆகியோரின் ஆட்சியின் கீழ் இருந்தது.

ஆலம்பூர் முன்பு அலம்புரம், ஹேமலாபுரம் , ஆலம்புரம் என்று அழைக்கப்பட்டது. ஆதம்புரா என்ற பெயரில், மேற்கு சாளுக்கிய மன்னர் ஆறாம் விக்ரமாதித்தனின் ஆட்சியில் கிபி 1101 தேதியிட்ட கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. [6]

கோவில்கள்[தொகு]

ஆலம்பூர் நவப்பிரம்மா கோயில்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. மேலும், குறிப்பிடத்தக்க கட்டிடக்கலை திறன்களை பிரதிபலிக்கின்றன. [7] ஸ்ரீசைலம் நீர் மின் திட்டத்தால் ஆலம்பூரில் உள்ள கோயில்களின் அசல் பகுதி நீரில் மூழ்கியதால், கோயில்கள் உயரமான இடங்களுக்கு மாற்றப்பட்டன. பொ.ச. 650 - 750க்கும் இடையில் பாதமியின் சாளுக்கியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட வடக்கு கட்டிடக்கலை பாணியில் இந்த கோயில்களின் தனித்துவம் அவர்களின் திட்டத்திலும் வடிவமைப்பிலும் உள்ளது. [8]

ஜோகுலம்பா கோவில்[தொகு]

தாட்சாயிணியின் சடலத்தை சுமந்து செல்லும் சிவன்

ஜோகுலம்பா கோவில் தாட்சாயிணியின் மேல் பற்கள் விழுந்த ஒரு சக்தி பீடமாக கருதப்படுகிறது.[4] தக்சன் யாகமும், தாட்சாயிணியின் தீக்குளிப்பும் சக்தி பீடங்களின் மூலக் கதையாகும். [9] பொ.ச.1390இல் முஸ்லிம் படையெடுப்பாளர்களால் அசல் கோயில் இடிக்கப்பட்டது. 615 ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் திருப்பணி செய்யப்பட்டது. [10]

சக்தி பீடங்கள் தாய் தேவியின் மிகவும் தெய்வீக இருக்கைகள் ஆகும். தாட்சாயிணி தேவியின் சடலத்தை சிவபெருமான் சுமந்து கொண்டு ஆரியவர்த்தம் முழுவதும் சோகத்தில் அலைந்தபோது, இந்த இடங்களில் உடல் உறுப்புகள் விழுந்தன.

நவபிரம்மா கோவில்கள்[தொகு]

நவபிரம்ம கோயில்கள் [3] சிவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்பது கோயில்களை உள்ளடக்கியது. [4] இந்த கோயில்கள் கிபி 7 முதல் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. மேலும், கலை மற்றும் கட்டிடக்கலைக்கு ஆதரவாளர்களான பாதமி சாளுக்கிய ஆட்சியாளர்களால் கட்டப்பட்டது. [11] ஆலம்பூர் கோயிலின் புனிதம் பற்றி கந்த புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரம்மா இங்கு சிவபெருமானுக்காக கடும் தவம் செய்ததாக கூறப்படுகிறது. சிவபெருமான் அவர் முன் தோன்றி படைப்பாற்றலை அருளினார். அதனால் பிரம்மேசுவரர் என்ற பெயரும் பெற்றார். [12]

பாபநாசி கோவில்கள்[தொகு]

பாபநாசி கோவில்கள் என்பது ஆலம்பூருக்கு தென்மேற்கே 2.5 கிமீ (1.6 மைல்) தொலைவில் உள்ள பாபநாசி கிராமத்தில் அமைந்துள்ள 9-ஆம் மற்றும் 11-ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட இருபத்தி மூன்று இந்துக் கோயில்களின் குழுவாகும்.[6] பாபநாசி கோயில்கள் சைவ பாரம்பரியத்தின் நவபிரம்மா கோயில்களுக்கு அருகில் உள்ளன. ஆனால் சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு இராஷ்டிரகூடர்களாலும், மேலை சாளுக்கியர்களாலும் கட்டப்பட்டது. பாபநாசி கோயில்கள் சதுர வடிவத்துடன் நாகரா கட்டிடக்கலையை காட்சிப்படுத்துகின்றன. நவபிரம்மா கோவில்களுடன், பாபநாசி குழுவும் சைவ மதத்தின் காளாமுகம், பாசுபதம்ஆகிய பிரிவினருடன் தொடர்புடையது.

சங்கமேசுவரர் கோவில்[தொகு]

சங்கமேசுவரம் என்பது சங்கமம் என்ற சொல்லில் இருந்து உருவானது. எனவே இக்கோயில் குடவெல்லி சங்கமேசுவரர் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. கோவிலில் காணப்படும் ஒரு கல்வெட்டின் அடிப்படையில், இந்த கோவில் இரண்டாம் புலிகேசியின் (பொ.ச.610-642 ) காலத்திற்கு முந்தையது . ஆலம்பூரில் உள்ள அனைத்து சாளுக்கியர் கோவில்களிலும் மிகவும் பழமையானது. [6] குடவெல்லி சங்கமேசுவரர் கோவில் முதலில் துங்கபத்திரை, கிருஷ்ணா ஆறுகள் சந்திக்கும் இடத்தில் தற்போதைய இடத்திலிருந்து வடகிழக்கே 20 கிமீ (12 மைல்) தொலைவில் அமைந்திருந்தது. 1979 ஆம் ஆண்டு ஸ்ரீசைலம் அணையின் கட்டுமானப் பணியின் காரணமாக அசல் தளம் நீரில் மூழ்கியபோது இது ஆலம்பூருக்கு மாற்றப்பட்டது. [13]

தொல்லியல் அருங்காட்சியகம்[தொகு]

பால பிரம்மா கோயில் வளாகத்தின் நுழைவாயிலில் தொல்லியல் அருங்காட்சியகம் உள்ளது. ஆலம்பூரின் நவபிரம்மா கோவில்களிலிர்ந்தும், அதன் சுற்றுப்புறங்களிலிருந்தும் மீட்கப்பட்ட சிற்பங்களும், கல்வெட்டுகளின் தொகுப்பையும் இது கொண்டுள்ளது. [13]

மக்கள்தொகை[தொகு]

1901 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆலம்பூரின் மக்கள்தொகை 30,222 ஆக இருந்தது. 1891இல் 27,271 ஆக இருந்தது. தலைமையகமான அலம்பூரில் 4,182 மக்கள் வசிக்கின்றனர். இந்தியாவின் இம்பீரியல் கெசட்டியரின் படி[14] ஆலம்பூர் என்பது ஐதராபாத் மாநிலத்தின் ராய்ச்சூர் மாவட்டத்தின் ஒரு வட்டமாகும். இது 43 கிராமங்களில் 480 சதுர கிலோமீட்டர் (190 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது.

2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[15] ஆலம்பூரின் மக்கள் தொகை 9350 ஆக இருக்கின்றது. இதில் ஆண்கள் 54% -ம் பெண்கள் 46% ஆக இருக்கின்றனர். ஆலம்பூரின் சராசரி கல்வியறிவு விகிதம் 61% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகம்; 64% ஆண்களும் 36% பெண்களும் கல்வியறிவு பெற்றுள்ளனர். மக்கள்தொகையில் 16% பேர் 6  வயதுக்குட்பட்டவர்கள்.

நிலவியல்[தொகு]

கிருஷ்ணா ஆறு இந்நகரத்தின் வடக்கே மகபூப்நகர் மாவட்டத்திலிருந்தும், துங்கபத்திரை ஆறு கர்நாடக மாநிலத்திலிருந்தும் பிரிக்கிறது. இந்த இரண்டு ஆறுகளின் சங்கமம் இந்தன் கிழக்கில், முன்பு குடவெல்லி கிராமத்தில் அமைந்துள்ளது. ஸ்ரீசைலம் அணை கட்டப்பட்டதால் கிராமம் நீரில் மூழ்கியது. நன்கு அறியப்பட்ட கவிஞர் குடவெல்லி சீனிவாச ராவ் குடவெல்லி கிராமத்தில் வாழ்ந்தார். மேலும், சுரவரம் பிரதாப ரெட்டியால் 1934 இல் வெளியிடப்பட்ட கோல்கொண்ட கவுள சஞ்சிகா புத்தகத்தில் [16] இந்நகரம் பற்றி ஆவணப்படுத்தப்பட்டுள்ளது.

சான்றுகள்[தொகு]

  1. "Alampur, Historical Places in Jugulamba Gadwal District". Archived from the original on 22 March 2009. பார்க்கப்பட்ட நாள் 2009-03-25.
  2. Map of Alampur Villages
  3. 3.0 3.1 "Alampur, Temples of Andhra Pradesh". பார்க்கப்பட்ட நாள் 2009-03-25.
  4. 4.0 4.1 4.2 4.3 "Mahabubnagar-NIC". mahabubnagar.nic.in. Archived from the original on 3 April 2016. பார்க்கப்பட்ட நாள் 14 June 2016.
  5. "List of Ancient Monuments and Archaeological Sites and Remains of Andhra Pradesh - Archaeological Survey of India". web.archive.org. 2014-06-25. Archived from the original on 2014-06-25. பார்க்கப்பட்ட நாள் 2020-10-26.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  6. 6.0 6.1 6.2 "Archeological Survey of India". www.asihyderabadcircle.nic.in. Archived from the original on 2020-10-30. பார்க்கப்பட்ட நாள் 2020-10-27.
  7. "Alphabetical List of Monuments - Andhra Pradesh". Archaeological Survey of India. Archived from the original on 25 June 2014. பார்க்கப்பட்ட நாள் 27 August 2015.
  8. "Golconda Fort, Hyderabad" (PDF). Archived from the original (PDF) on 9 April 2009. பார்க்கப்பட்ட நாள் 15 April 2009.
  9. "Kottiyoor Devaswam Temple Administration Portal". kottiyoordevaswom.com/. Kottiyoor Devaswam. பார்க்கப்பட்ட நாள் 20 July 2013.
  10. "Alampur Jogulamba Temple". gotirupati.com. 22 April 2016.
  11. "Bewitching temple architecture". Archived from the original on 25 July 2008. பார்க்கப்பட்ட நாள் 2009-03-26.
  12. "Alampur Jogulamba Temple - Timings, History, Phone, Image, Websit". 22 April 2016.
  13. 13.0 13.1 Kolluru, Pallavi. "Alampur temple town beckons one and all". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-27.
  14. "Imperial Gazetteer2 of India, Volume 5". dsal.uchicago.edu. Digital South Asia Library. p. 204.
  15. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
  16. "గోలకొండ కవుల సంచిక/కవిపరిచయము - వికీసోర్స్". te.wikisource.org. பார்க்கப்பட்ட நாள் 2020-10-08.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Alampur, Andhra Pradesh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.