ஆலம்பாடி பாறை ஓவியங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆலம்பாடி பாறை ஓவியங்கள், விழுப்புரம் மாவட்டத்தில் திருக்கோவிலூரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஆலம்பாடி என்னும் இடத்தில் உள்ள பாறை ஓவியங்கள் ஆகும்.[1] ஆலம்பாடி ஊரின் மேற்குப்புறத்தில் அமைந்த இயற்கைப் பாறைகளின் மேற்பரப்பில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.[2]

இவை மான், மாடு, பன்றி போன்ற விலங்குகளைக் குறிக்கும் ஓவியங்களாகக் காணப்படுகின்றன. விலங்குகளின் உள்ளுறுப்புக்களைக் காட்டும் எக்ஸ் - கதிர் வடிவம் எனும் பாணியில் வரையப்பட்ட ஓவியங்கள் இங்கு உள்ளன. தமிழ்நாட்டிலுள்ள பாறை ஓவியங்களில் இவ்வாறான ஓவியங்கள் இவ்விடத்திலேயே முதல் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டன.[3] இவ்வோவியங்கள் கோட்டுரு முறையில் வரையப்பட்டுள்ளன. இங்கு சில இடங்களில் காணப்படும் இரட்டைப் படைப் பூச்சு, பழைய ஓவியத்தின் மீது மீண்டும் கோடுகள் வரையப்பட்டதைக் காட்டுவதாகக் கருதப்படுகிறது.[4]

இது அரசின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னம் ஆகும்.

காலம்[தொகு]

இங்கே காணப்படும் ஓவியங்கள் வெவ்வேறு காலகட்டங்களைச் சேர்ந்தவை. இவற்றுள் இடைக்கற்காலம் அல்லது அதற்கு முந்திய காலப் பகுதியைச் சேர்ந்த ஓவியங்களும், புதியகற்காலம்/செப்புக்காலத்தைச் சேர்ந்த ஓவியங்களும் அடங்கும்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "பாறை ஓவியங்கள் - ஆலம்பாடி". மூல முகவரியிலிருந்து 2021-06-23 அன்று பரணிடப்பட்டது.
  2. Kannan, R., 2007, p. 58
  3. Kannan, R., 2007, p. 58
  4. பவுன்துரை, இராசு., 2001, பக். 96, 97
  5. Kannan, R., 2007, p. 58

உசாத்துணைகள்[தொகு]

  • பவுன்துரை, இராசு., தமிழகப் பாறை ஓவியங்கள், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், 2001.
  • Kannan, R., Manual on Conservation and Restoration of Monuments, Government Museum, Chennai, 2007.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]