ஆலந்தூர் மிசா ம. ஆபிரகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆலந்தூர் மிசா. ம. ஆபிரகாம் என்பவர் தமிழகத்தின் முன்னாள் ஆலந்தூர் திமுக சட்ட மன்ற உறுப்பினர் . இவர் ஆலந்தூரில் 18- 10- 1935 இல் பிறந்தவர். இவர் எஸ்.எஸ்.எல்.சி. வரை படித்துள்ளார். இவருக்கு ம. எலிசபெத் என்ற மனைவி உள்ளார்.

1984-ல் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கபட்டவராவார்.[1]

இளமை பருவம்[தொகு]

இவர் தனது பள்ளிப் படிப்பைச் சென்னை சைதாபேட்டையில் உள்ள மாந்தோப்பு பள்ளியில் தொடங்கினார். பள்ளியில் படிக்கும் பருவத்திலிருந்தே தந்தை பெரியார் மீதுள்ள ஈர்ப்பின் காரணமாக அவரது கூட்டங்களில் கலந்துகொள்வர்

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் 1984 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலின் போதுபோட்டியிட்டு ஆலந்தூர் தொகுதியில் வெற்றிபெற்றார். திமுகவில் இவர் தொடர்ந்து 25 ஆண்டுகள் ஆலந்தூர் நகரச் செயலாளராக பணியாற்றியவர்.

தி.மு.க நடத்திய போரட்டகளில் முன்னின்று நடத்தி கைதாகி பலகாலம் சிறையில் இருந்தார். நெருக்கடி நிலைமை எனப்படும் மிசா (Maintenance of Internal Security Act) சட்டத்தில் கைதாகி ஓர் ஆண்டு சிறையில் இருந்தார்.

நவோதயா பள்ளிகள் தமிழ்நாட்டில் துவக்குவதை எதிர்த்து 1986 ஆம் ஆண்டு தமிழகத்தில் போராட்டம் தீவிரமடைந்தது. இந்தப் போராட்டத்தின் விளைவாக 10 திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிகளை சபாநாயகராக இருந்த பிஎச் பாண்டியன் ரத்து செய்தார். அதில் ஆலந்தூர் ஆபிரகாமும் ஒருவர்.

இறப்பு[தொகு]

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்

நினைவுச் சின்னம்[தொகு]

கிண்டி - சைதாபேட்டையில் இடையே உள்ள ஆலந்தூர் சாலையில் உள்ள மேம் பாலத்திற்கு இவரது பெயர்சூட்டப்பட்டுள்ளது. சென்னை நங்கநல்லூரில் ஆபிரகாமின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது சென்னை காந்தி மண்டபத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் ஆலந்தூர் ஆபிரகாமின் நிழற்படமும் இடம்பெற்றுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]