ஆலங்காயம் பேரூராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலங்காயம்
ஆலங்காயம்
city
Country இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்வேலூர் மாவட்டம்
ஏற்றம்572 m (1,877 ft)
மக்கள்தொகை (2006)
 • மொத்தம்32,846 appr
Languages
 • Officialதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
PIN635701
Telephone code04174
வாகனப் பதிவுTN-83
Sex ratio1000 females for every 1000 males /

ஆலங்காயம் பேரூராட்சி (ALANGYAM TOWN PANCHAYAT ) தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டத்தில் அமைந்த ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும். இது வாணியம்பாடியிலிருந்து 18 கி.மீ தொலைவில் உள்ளது.

மக்கள்தொகை பரம்பல்[தொகு]

8 சகிமீ பரப்பு கொண்ட ஆலங்காயம் பேரூராட்சி 15 வார்டுகளையும், 105 தெருக்களையும் கொண்டது. ஆலங்காயம் பேரூராட்சி 4601 வீடுகளும், 17,400 மக்கள்தொகையும் கொண்டது. [1]

சிறப்புகள்[தொகு]

உலகின் இரண்டாவதும், ஆசியா கண்டத்திலேயே மிகவும் பெரியதுமான வைணு பாப்பு வானாய்வகம், ஆலங்காயத்திலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஆலங்காயம் பகுதியைச் சுற்றி சவ்வாது மலை அமைந்துள்ளதால் இப்பகுதியில் மிதமான வெப்பநிலை ஆண்டு முழுவதும் நிலவுகிறது.

ஆலங்காயத்திலிருந்து தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களுக்கு, குறிப்பாகச் சென்னை சேலம் ,திருப்பத்தூா், வேலூா் போன்ற நகரங்களுக்கு நேரடியாக பேருந்து வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது..

கல்க்கோயில், பெத்தூா், நரசிங்கபுரம், படகுப்பம், புலவா்பள்ளி, கல்லரப்பட்டி, பங்கூர், இராசாபாளையம், கொங்கியுா் போன்ற கிராம பகுதிகள் ஆலங்காயத்தை சுற்றி உள்ளன

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆலங்காயம் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-05-24. பார்க்கப்பட்ட நாள் 2019-05-05.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலங்காயம்_பேரூராட்சி&oldid=3757166" இலிருந்து மீள்விக்கப்பட்டது