ஆற்று ஓங்கல்கள்
Jump to navigation
Jump to search

மொன்ட்டானாவில் மொன்டானாவில் பவுடர் ஆற்றில் காணப்படும் ஆற்று ஓங்கல்கள்
ஆற்று ஓங்கல்கள் (Cut bank அல்லது River Cliffs) என்று அழைக்கப்படுவது ஆறோடு தொடர்புடைய நிலத்தோற்றங்களுள் ஒன்று ஆகும். செங்குத்து சரிவு மற்றும் ஆற்றின் அதிக வேகம் காரணமாக செங்குத்து அரித்துத் தின்னல் செயல் இங்கு முதன்மையாக இருக்கிறது.[1]
ஆற்று வளைவில் ஆற்றுநீர் செல்லும்போது அது வளைவின் மேல் நேரடியாக மோதி அரித்து வன்சரிவுடைய ஆற்று ஓங்கலை ஏற்படுத்துகிறது. ஆறுகள் ஓடும் போக்கில் மியான்டர்களின் வளைவானது வெளிபுறமாக வளர்ச்சி அடைகின்றது. மியான்டர்களின் போக்கில் காணப்படும் கிளைக் குன்றுகளின் பக்கவாட்டு அரிப்பே இதற்கு காரணமாகும். [2]