ஆற்றுப்படை இலக்கணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொல்காப்பியம் ஆற்றுப்படை நூலுக்கு இலக்கணம் கூறுகிறது. வள்ளல் ஒருவரிடம் தன் வறுமையைப் போக்கும் வளங்களைப் பெற்றுவந்த ஒருவர். கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலானோரை அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை.[1]

புறப்பொருளின் இலக்கணம் கூறும் புறப்பொருள் வெண்பாமாலை இவர்கள் நால்வருக்கும் தனித்தனியே இலக்கண நூற்பாவும், பொருள் விளக்கப் பாடலும் கூறுகிறது. [2]

பாட்டியல் நூல்களில் காலத்தால் முந்திய பன்னிரு பாட்டியல் என்னும் தொகுப்பு நூலில் ஆற்றுப்படைக்குப் பொதுவகையில் இலக்கணம் கூறப்பட்டுள்ளது. [3]

அடிக்குறிப்பு[தொகு]

 1. புறத்திணையின் 7 திணைகளில் ஒன்றான பாடாண் திணையின் துறைகளில் ஒன்றாகத் தொல்காப்பியர் ஆற்றுப்படையைக் குறிப்பிடுகிறார்.
  கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
  ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
  பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
  சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம் – தொல்காப்பியம், புறத்திணையியல் 88

 2. புறத்திணையை 12 எனப் பகுத்துக்கொண்ட புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கண நூல் கூத்தர், பொருநர், பாணர், விறலி ஆகியோரின் ஆற்றுப்படைகளுக்குத் தனித்தனியே இலக்கணம் கூறுகிறது. புறப்பொருள் வெண்பாமாலை, பாடாண் படலம் 28 முதல் 31
 3. பன்னிரு பாட்டியல் 22
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆற்றுப்படை_இலக்கணம்&oldid=1188174" இருந்து மீள்விக்கப்பட்டது