ஆற்றல் (சமூகம்)
Appearance
ஆற்றல் பயன்பாடு, சூழலைக் கட்டுப்படுத்தவும் அதற்கு இசைவாக வாழ்வதற்கும் உதவுகிறது. இதனால் அது, மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்துள்ளது. செயற்திறன் கொண்ட எந்தச் சமுதாயத்திலும் ஆற்றல் பயன்பாட்டு மேலாண்மை தவிர்க்கமுடியாததாக உள்ளது. தொழில்மய நாடுகளில், வேளாண்மை, போக்குவரத்து, கழிவகற்றல், தகவல் தொழில்நுட்பம், தொலைத்தொடர்பு போன்ற சமூக வளர்ச்சிக்கு அடிப்படையான விடயங்களின் தேவைக்காக ஆற்றல் வளங்களின் மேம்பாடு அவசியமாகின்றது. தொழிற் புரட்சிக்குப் பின்னர் ஏற்பட்ட கூடிய அளவிலான ஆற்றல் பயன்பாடு பல கடுமையான பிரச்சினைகளையும் கொண்டுவந்துள்ளது. இவற்றுள் சூழல் வெப்பமாதல் போன்றவை உலகைக் கடுமையான தீவாய்ப்பு நிலைக்குள் தள்ளியுள்ளன.