ஆற்றல் மாற்றத்திற்கான ஆய்வகம்

ஆள்கூறுகள்: 47°22′35.10″N 8°32′53.17″E / 47.3764167°N 8.5481028°E / 47.3764167; 8.5481028
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆற்றல் மாற்றத்திற்கான ஆய்வகம்
வகைபொது
உருவாக்கம்1892
அமைவிடம், ,
Switzerland

47°22′35.10″N 8°32′53.17″E / 47.3764167°N 8.5481028°E / 47.3764167; 8.5481028
வளாகம்நகரம்
இணையதளம்[1]

ஆற்றல் மாற்ற ஆய்வகம் (Laboratory for Energy Conversion) முன்பு சுழலெந்திர ஆய்வகம் அறியப்பட்டது. இது ஆரல் போலெசுலாவ் சுட்டோடொலா (Aurel Boleslav Stodola) என்பவரால் 1892 ஆம் ஆண்டு சுவிசர்லாந்தில் ஜூரிச் மத்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் (ETH) ஒரு பகுதியாக நிறுவப்பட்டது. இந்த ஆய்வகம் சுழற்பொறியியல் துறை வராலாற்றில் புலமைபெற்ற பொறியாளர்கள் தலைமையில் வழி நடத்தப்பட்டுவந்தது..

ஆராய்ச்சித் துறைகள்[தொகு]

ஆற்றல் மாற்றஆய்வகத்தின் தற்போதைய ஆராய்ச்சி திட்டங்கள் கீழ்காணும் புலங்களில் அமைகின்றன:

  • ஆற்றல் பொருளியலும் கொள்கையும்
  • காற்று ஆற்றல் செயல்திறமும் நம்பகத்தன்மையும்
  • சுழற்பொறிகளின் திறமை மேம்பாடு
  • செய்முறைச் சுழற்பொறியியல்
  • ஒருங்கொளிவழி மின்ம வாயில்கள்
  • கருவியியல்
  • வளிம அமுக்குகளின் உயர்வட்டிப்பு அயர்வைக் குறைத்தல்
  • உயிர்மருத்துவ நோய்நாடல்
  • வான்கல இரைச்சல் தணிப்பு
  • குளிர்த்தலும் வெப்ப மேலாண்மையும்
  • இயங்கும் மின்வழங்கல் அமைப்பு உருவாக்கம்
  • புதிய அளத்தை நுட்பங்கள்

 

சாதனைகள்[தொகு]

ஆற்றல் மாற்ற ஆய்வகத்தின் பல சாதனைகளில் அண்மையில் உருவாக்கப்பட்ட காலப் பிரிதிறப் பாய்ம இயக்கக் குலைதிற ஆய்கருவி(FENT) குறிப்பிடத் தக்கதாகும்.[1] இந்த ஆய்கருவி முதன்முறையாக, சுழற்பொறியின் குலைதிறவாக்கத்தை(entropy) அளக்கிறது. உயர்தர ஒருசாலை ஆய்வாளர் மேற்பார்வையிடும் அளத்தல் அறிவியலும் தொழில்நுட்பமும் எனும் ஆய்விதழ்[2] இந்த ஆய்கருவி உருவாக்கம் 2008 இல் பாய்ம இயக்கவியல் சார்ந்த மிகச்சிறந்த கொடையாகும் எனக் குறிப்பிட்டுள்ளது.

பேராசிரியர்கள்  1892 முதல்[தொகு]

  • 1892 - 1929 Aurel Boleslav Stodola
  • 1929 - 1954 Henri Quiby
  • 1954 - 1983 Prof. Walter Traupel
  • 1983 - 1998 George Gyarmathy
  • 1998 - Prof. Reza Abhari

தொழில்முறை பங்காளர்கள்[தொகு]

  • ABB, குழு, சுவிட்சர்லாந்து
  • BKW FMB Energie AG, சுவிட்சர்லாந்து
  • EOS வைத்திருக்கும், சுவிட்சர்லாந்து
  • ஜெனரல் எலக்ட்ரிக், அமெரிக்கா
  • மனிதன் டர்போ ஏஜி சுவிச்சர்லாந்து
  • மிட்சுபிஷி கனரக தொழிலகம், ஜப்பான்
  • MTU, செருமனி
  • சீமென்ஸ், அமெரிக்கா, செருமனி
  • சுவிசுமின் ஆராய்ச்சி, சுவிச்சர்லாந்து [3]
  • தோஷிபா, யப்பான்
  • பிரவுன் போவெரி அண்டு சீ(Cie)
  • சார்லஸ் அல்கர்னான் பார்சன்சு
  •   கஸ்டப் லாவல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Time-resolved entropy measurements using a fast response entropy probe". Measurement Science and Technology. 17 September 2008.
  2. Foss, John; Dewhurst, Richard; Fujii, Kenichi; Regtien, Paul (1 May 2009). "Announcing the 2008 Measurement Science and Technology Outstanding Paper Awards". Measurement Science and Technology 20 (5): 050101. doi:10.1088/0957-0233/20/5/050101. 
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-12-03. பார்க்கப்பட்ட நாள் 2017-06-23.

வெளி இணைப்புகள்[தொகு]