ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல் (Energy and environmental engineering) என்பது ஆற்றல் பொறியியலின் ஒரு கிளை ஆகும். ஆற்றலை திறம்பட பயன்படுத்தவும் சுற்றுச்சூழலை பராமரிக்கவும் இத்துறை முயல்கிறது. கட்டமைக்கப்பட்ட சூழல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் பாரம்பரிய எரிசக்தி தொழில்கள் உட்பட ஆற்றல் பொறியாளர்களுக்கு பல துறைகளின் அறிவு தேவைப்படுகிறது. [1]

சூரியக் கதிர்வீச்சு இப்பிரிவில் முக்கியமானதாகவும் புரிந்து கொள்ள வேண்டியதாகவும் உள்ளது. இக் கதிர்வீச்சு பூமியின் வானிலையையும் கிடைக்கும் பகல் நேரத்தையும் பெரிதும் பாதிக்கிறது. பூமியின் இயற்கை சூழலை மட்டுமல்ல, நாம் உருவாக்கும் சிறிய உள் சூழல்களையும் இது பாதிக்கிறது. [2]

ஆற்றல் பொறியியலுக்கு குறைந்தபட்சம் இயக்கவியல், வெப்ப இயக்கவியல், கணிதம், பொருளறிவியல், வேதிவினைக் கூறுகளின் விகிதவியல், மின் இயந்திரங்கள், உற்பத்தி செயல்முறைகள் மற்றும் ஆற்றல் அமைப்புகள் பற்றிய பல்வேறு துறை புரிதலும் தேவைப்படுகிறது.

உட்சூழல்கள் மற்றும் வெளிப்புற சூழல்கள் என சுற்றுச்சூழல் பொறியியல் பொதுவாக இரண்டு முக்கிய பகுதிகளாக கிளைக்கிறது. வீட்டுவசதி அல்லது அலுவலகங்கள் அல்லது பிற வணிக நிறுவனங்கள் தொடர்புடைய பண்புகளை உட் சூழல்கள் கொண்டிருக்கும். . சுற்றுச்சூழல் பொறியியல் சில நேரங்களில் உள் சூழலை ஒரு வசதியான நிலைக்கு நிலைநிறுத்துவதற்கு கட்டிட சேவைகளை வடிவமைப்பதை குறிக்கும் அல்லது கார்பன் டை ஆக்சைடு அல்லது பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் போன்ற அதிகப்படியான மாசுபாடுகளை அகற்றுவதை குறிக்கும். [3]

நீர் நிலைகள், காற்று, நிலம் அல்லது கடல் போன்றவை வெளிப்புற சூழலை குறிக்கும். இவற்றின் ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான புதிய உத்திகள் அல்லது இவற்றை மாசுபடுத்தும் தொழில்நுட்பங்களுக்கான சிகிச்சை வசதிகளை உருவாக்குதல் போன்றவை வெளிப்புறச் சூழலில் அடங்கும்.

இந்த பரந்த துறை பல பகுதிகளை உள்ளடக்கியதாகும். ஆனால் முக்கியமாக இயந்திரவியலையும் மின்சாரவியலையும் இந்தத்துறை சார்ந்திருக்கிறது. புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்கான தூய்மையான, திறமையான வழிகளை ஆராய முற்படுகிறது, அதே நேரத்தில் சூரிய, காற்று மற்றும் அலை ஆற்றல் போன்ற புதுப்பிக்கத்தக்க மற்றும் நிலையான வளங்களைப் பயன்படுத்தும் அமைப்புகளையும் ஆராய்ந்து உருவாக்குகிறது. [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Energy and Environmental Engineering - BEng/BEng(Hons) at Edinburgh Napier University". Courses.napier.ac.uk. மூல முகவரியிலிருந்து 2015-04-02 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2015-05-14.
  2. Solar Radiation and Daylight Models, 2nd edition, T Muneer, Elsevier, Butterworth and Heinman, London, 2004
  3. Air Conditioning Engineering, Jones and Arnold, London 1985
  4. [1][தொடர்பிழந்த இணைப்பு]