ஆறுமுகநேரி தொடருந்து நிலையம்
ஆறுமுகநேரி | |||||
---|---|---|---|---|---|
![]() | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | ஆறுமுகநேரி, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு | ||||
ஆள்கூறுகள் | 8°34′46″N 78°05′31″E / 8.579354°N 78.092031°E | ||||
ஏற்றம் | 7 மீட்டர்கள் (23 அடி) | ||||
தடங்கள் | திருநெல்வேலி–திருச்செந்தூர் பிரிவு | ||||
நடைமேடை | 3 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | நிலையான, தரைத் தளம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மாற்றுத்திறனாளி அணுகல் | உண்டு ![]() | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | ANY | ||||
இந்திய இரயில்வே வலயம் | தென்னக இரயில்வே | ||||
இரயில்வே கோட்டம் | மதுரை | ||||
வரலாறு | |||||
திறக்கப்பட்டது | 1942 | ||||
மறுநிர்மாணம் | 2008 | ||||
மின்சாரமயம் | ஆம் | ||||
| |||||
அமைவிடம் | |||||
ஆறுமுகநேரி தொடருந்து நிலையம் (Arumuganeri railway station) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறுமுகநேரியில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இது மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டது.[1]
வரலாறு[தொகு]
ஆறுமுகநேரி தொடருந்து நிலையம் திருச்செந்தூர்-தூத்துக்குடி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான உப்பளங்கள் உள்ளன. இந்த நிலையத்தைக் கட்டுவதற்கு முக்கிய காரணம் சரக்கு போக்குவரத்து ஆகும். இப்பகுதியில் தயாரிக்கப்படும் உப்பானது ஆலைகளில் பதப்படுத்தப்பட்டு, பொதியிடப்பட்டு இறுதியாகச் சரக்கு இரயில் மூலம் பிற பகுதிகளுக்கு முன்னர் கொண்டு செல்லப்பட்டது. தற்போது சரக்கு ரயில் மூலம் உப்பு எடுத்துச் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது.[2]
பயணிகள் தொடருந்து சேவை[தொகு]
செந்தூர் விரைவு வண்டி மட்டுமே இந்த தொடருந்து நிலையத்திலிருந்து சென்னைக்கு நேரடியாகச் செல்லும் இரயில் ஆகும். ஆறுமுகநேரியிலிருந்து திருநெல்வேலி, தூத்துக்குடி, பழனி மற்றும் திருச்செந்தூருக்குப் பயணிகள் தொடருந்து சேவைகள் உள்ளன.[3]