ஆறுமுகசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சிவனடியார் ஆறுமுகசாமி( இறப்பு 2017 ஏப்ரல் 8) தில்லை நடராசர் கோவிலில் தமிழில் வழிபடும் உரிமையை போராடி பெற்றவர்.

ஆறுமுகசாமி யார்?[தொகு]

ஆறுமுகசாமி என்ற சிவனடியார், சிதம்பரம் நடராசர் கோவிலைத் தங்கள் பூணூலில் சுருட்டி வைத்திருக்கும் தீட்சிதர்களின் சாதிவெறியை எதிர்த்து, வழிபாட்டு உரிமைக்காக போராட்டம் நடத்தியவர். ஆறுமுகசாமி இல்லற வாழ்க்கையைத் துறந்து, துறவறம் பூண்டு, சைவத் திருமறையான தேவாரம் திருவாசகப் பாடல்களைப் பாடுவதைக் கற்றுத் தேர்ந்து, சிதம்பரம் அருகே உள்ள குமுடிமூலை என்ற சிற்றூரில் அமைந்திருக்கும் பசுபதி ஈஸ்வரன் கோவிலில் ஓதுவாராக இறைப்பணி ஆற்றி வந்தவர். இதற்காகத் தமிழக அரசின் நிதி உதவியையும் பெற்று வருந்தார்.

வாழ்க்கை குறிக்கோள்[தொகு]

சிதம்பரம் நடராசர் கோவில் கருவறை முன் உள்ள திருச்சிற்றம்பல மேடையில் ஏறி நின்று, தேவாரம் திருவாசகம் பாடி நடராசரை வழிபட வேண்டும் என்பதனைத் தனது ஆன்மீக வாழ்க்கையின் இலட்சியமாக, குறிக்கோளாகக் கொண்டிருக்கிறார், ஆறுமுகசாமி. 73 வயதான, அந்திமக் காலத்தை நெருங்கிவிட்ட, அந்த முதிய சிவனடியாரின் விருப்பம் நிறைவேறத் தடைக்கல்லாக நிற்கிறார்கள், தீட்சிதர்கள்.

தில்லை போராட்டம் சிறுகுறிப்பு[தொகு]

தில்லை போராட்டம் அது நீண்ட நெடிய போராட்டம். அந்த நீண்ட நெடிய போராட்டத்தில், அவருக்கு துணை நின்றது மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தலைமையில், மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் அதன் சகோதர அமைப்புகள் (புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி), விடுதலை சிறுத்தைகள், பாட்டாளி மக்கள் கட்சி, சில தமிழ் அமைப்புகள் மற்றும் ஜனநாயக சக்திகள்.

ஆறுமுகசாமி 8.5.2000 அன்று திருச்சிற்றம்பல மேடையில் ஏறிப் பாட முயன்ற பொழுது, தீட்சிதர் கும்பல் தாக்கினர். அப்போது முதல் தொடர்ச்சியாக மனித உரிமை பாதுகாப்பு மையத்துடன் இணைந்து போராடி தில்லையில் தமிழில் வழிபடும் உரிமையை பெற்று கொடுத்தார்.

மறைவு[தொகு]

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த ஆறுமுகசாமி கடலூரில் உள்ள தன் மகள் வீட்டில் தங்கி மருத்துவம் பார்ந்துவந்தார் இந்நிலையில் 2017 ஏப்ரல் 8 அன்று தன் 94 ஆம் அகவையில் காலமானர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "சிவனடியார் ஆறுமுகசாமி காலமானார்". செய்தி. தினமணி. 2017 ஏப்ரல் 9. 9 ஏப்ரல் 2017 அன்று பார்க்கப்பட்டது. Check date values in: |date= (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறுமுகசாமி&oldid=2245186" இருந்து மீள்விக்கப்பட்டது