ஆறுபீனைல் ஈத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறுபீனைல் ஈத்தேன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,1′,1′′,1′′′,1′′′ ′,1′′′ ′′,1′′′ ′′′-ஈத்தேனெக்சாயில்யெக்சாபென்சீன்
வேறு பெயர்கள்
1,1,1,2,2,2-ஆறுபீனைல் ஈத்தேன்
இனங்காட்டிகள்
17854-07-8
ChemSpider 453126
InChI
  • InChI=1S/C38H30/c1-7-19-31(20-8-1)37(32-21-9-2-10-22-32,33-23-11-3-12-24-33)38(34-25-13-4-14-26-34,35-27-15-5-16-28-35)36-29-17-6-18-30-36/h1-30H
    Key: IPOBVSHPVYWJQC-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 519482
SMILES
  • c1ccc(cc1)C(c2ccccc2)(c3ccccc3)C(c4ccccc4)(c5ccccc5)c6ccccc6
பண்புகள்
C38H30
வாய்ப்பாட்டு எடை 486.66 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

ஆறுபீனைல் ஈத்தேன் (Hexaphenylethane) என்பது C38H30 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கருதுகோளியலான ஒரு கரிமச் சேர்மம் ஆகும். ஆறு பீனைல் பதிலிகள் கொண்ட ஓர் ஈத்தேன் உள்ளகம் இச்சேர்மத்தில் இருக்கும். ஆறுபீனைல் ஈத்தேனை தொகுத்து தயாரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளுமே வெற்றியில் முடியவில்லை.[1] முப்பீனைல்மெத்தில் இயங்கு உறுப்பு (Ph3C) ஓர் இருபடிச் சேர்மமாதல் வினையினால் ஆறுபீனைல் ஈத்தேன் உருவாகும் என கருதப்படுகிறது. இந்த இருபடி உண்மையில் சமச்சீர் அல்லாத ஓர் இனம் என்றும் அது கோம்பெர்க்கின் இருபடி என்றும் அணுக்கரு காந்த ஒத்ததிர்வு நிறமாலைகாட்டி ஆய்வு வெளிப்படுத்துகிறது.

ஆறுபீனைல் ஈத்தேனின் பதிலீடு செய்யப்பட்ட வழிப்பெறுதியான ஆறுகிசு(3,5-பியூட்டைல்பீனைல்)ஈத்தேன் என்ற சேர்மம் தயாரிக்கப்பட்டது. வழக்கமான பிணைப்பு நீளம் 154 பைக்கோமீட்டருடன் ஒப்பிடும்போது இது 167 பைக்கோமீட்டர் நீளத்தில் மிக நீண்ட மத்திய C-C பிணைப்பைக் கொண்டுள்ளது. மூவிணைய-பியூட்டைல் பதிலிகளுக்கு இடையே உள்ள கவர்ச்சிகரமான இலண்டன் சிதறல் விசைகள் மிகவும் தடைசெய்யப்பட்ட இந்த மூலக்கூறின் நிலைத்தன்மைக்கு காரணமாக இருப்பதாக நம்பப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lewars, Errol G. (2008). "Chapter 8: Hexaphenylethane". Modeling Marvels. பக். 115–129. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781402069734. 
  2. Rösel, Sören; Balestrieri, Ciro; Schreiner, Peter R. (2017). "Sizing the role of London dispersion in the dissociation of all-meta tert-butyl hexaphenylethane" (in en). Chemical Science 8 (1): 405–410. doi:10.1039/C6SC02727J. பன்னாட்டுத் தர தொடர் எண்:2041-6520. பப்மெட்:28451185. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறுபீனைல்_ஈத்தேன்&oldid=3703610" இலிருந்து மீள்விக்கப்பட்டது