ஆறன்முளா பொன்னம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறன்முளா பொன்னம்மா
பிறப்பு(1914-04-08)8 ஏப்ரல் 1914
ஆறன்முளா, கேரளம், இந்தியா
இறப்பு21 பெப்ரவரி 2011(2011-02-21) (அகவை 96)
திருவனந்தபுரம், கேரளம், இந்தியா
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1943 முதல் 2004 வரை
பெற்றோர்மாளேது கேசவப் பிள்ளை
பாறுக்குட்டி அம்மா
வாழ்க்கைத்
துணை
கொச்சு கிருஷ்ண பிள்ளை
பிள்ளைகள்ராஜம்மா, ராஜசேகரன்
உறவினர்கள்
விருதுகள்2006 - வாழ்நாள் சாதனையாளர் விருது

ஆறன்முளா பொன்னம்மா (Aranmula Ponnamma) 1914 ஏப்ரல் 18 அன்று பிறந்து 2011 பிப்ரவரி 21 வரை வாழ்ந்த இவர் தேசிய விருது பெற்ற, மேலும் பலத் திரைப்படங்களில் கதாநாயகனின் தாயாக நடித்ததனால் நன்கு அறியப்பட்ட மலையாள திரைப்பட நடிகை ஆவார்.[1][2]

இளமை வாழ்க்கை[தொகு]

பொன்னம்மா திருவிதாங்கூர் பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஆறன்முளா என்ற இடத்தில் மாளேது கேசவப் பிள்ளைக்கும், பாறுக்குட்டி அம்மாவிற்கும் ஐந்து குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தார்.[3] இவருக்கு ராமகிருஷ்ண பிள்ளை, பாங்கியம்மா, பாஸ்கரா பிள்ளை, தங்கம்மா என்ற நான்கு உடன்பிறப்புகள் உண்டு.[4] இவர் தனது 12வது வயதில் கருநாடக இசைப் பாடகராக தனது தொழிலை தொடங்கினார். 15வது வயதில் பம்பா நதியின் கரையோரங்களில் இந்து மஹாமண்டலம் ஏற்பாடு செய்த கூட்டங்களில் பாட ஆரம்பித்தார், மூத்த மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு முன், பாலா என்ற இடத்திலுள்ள ஒரு ஆரம்ப பாடசாலையில் அவர் ஒரு இசை ஆசிரியராக நியமிக்கப்பட்டார். பின்னர் அவர் சுவாதித் திருநாள் மியூசிக் அகாடமியில் சேர்ந்தார். பயிற்சிக்குப் பிறகு திருவனந்தபுரம் காட்டன் ஹில் உயர்நிலைப் பள்ளியில் இசை ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.

குடும்பம்[தொகு]

பொன்னம்மா கொச்சு கிருஷ்ணப் பிள்ளை என்பவரை மணந்து கொண்டார், இவர்களுக்கு ராஜம்மா என்ற மகளும், ராஜசேகரன் என்ற மக்னும் இருக்கின்றனர். இவரது பேத்தி நடிகர் சுரேஷ் கோபியை மணந்து கொண்டுள்ளார்.[5]

தொழில்[தொகு]

பொன்னம்மாவின் நடிப்பு அறிமுகம் 29 வயதில் "பாக்யலட்சுமி" என்ற நாடகத்தின் மூலம் நடந்தது, பின்னர் பல நாடகங்களில் நடித்து வந்த இவர் 1950இல் மிஸ் குமாரி என்ற படத்தில் நடிகர் சசிதரனின் தாயாராக அறிமுகமானார்.[2] அதே வருடத்தில் அவர் நடிகர் திக்குறிசி சுகுமாரனுடன் "அம்மா" என்றப் படத்தில் தாயார் பாத்திரத்தில் நடித்தார், இது பிரபலமான தயாரிப்பாளர் டி. ஈ. வாசுதேவனின் 18 வது மலையாள திரைப்படமாகும்.[6] 1968 இல், பி. வேணு இயக்கத்தில் மலையாள சினிமாவின் முதல் முழு நீள நகைச்சுவைத் திரைப்படமான "விருதன் சங்கு" படத்தில் நடித்தார் 60 ஆண்டுகால திரை வாழ்க்கையில் மூத்த நடிகரான திக்குறிசி சுகுமாரன், இரண்டாம் தலைமுறை நடிகர்களான பிரேம் நசீர், சத்யன் மற்றும் இரண்டாம் தலைமுறை நடிகர்களாலான மம்மூட்டி, மோகன்லால் மற்றும் சுரேஷ் கோபி ஆகியோருக்கு தாயாராக நடித்துள்ளார்.

இவர் கடைசியாக் 2004இல் "கௌரிசங்கரம்" என்ற படத்தில் நடித்தார். பின்னர் தனது 91வது வயதில் 2011 பிப்ரவர் 21 அன்று திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் இறந்தார்.[7][8][9]

குறிப்புகள்[தொகு]

  1. சாய்ந்த எழுத்துக்கள்2/03/09/stories/2002030901030200.htm Notice of Aranmula Ponnamma's death[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 Aranmula Ponnamma profile
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-12-03. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2015-05-05. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-10-09. பார்க்கப்பட்ட நாள் 2019-03-16.
  6. Excerpt from www.thehindujobs.com பரணிடப்பட்டது 21 பெப்பிரவரி 2009 at the வந்தவழி இயந்திரம்
  7. "Aranmula Ponnamma dies at 96". டெக்கன் ஹெரால்டு. 2011-02-21. http://www.deccanherald.com/content/139805/aranmula-ponnamma-dies-96.html. பார்த்த நாள்: 2011-02-21. 
  8. "Aranmula Ponnamma dies". கேரளம்: இந்தியன் எக்சுபிரசு. 2011-02-21. http://expressbuzz.com/entertainment/malayalam/kerala-aranmula-ponnamma-dies/250122.html. பார்த்த நாள்: 2011-02-21. [தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு][தொடர்பிழந்த இணைப்பு]
  9. "Aranmula Ponnamma passes away". கேரளம்: "SansCinema". 2011-02-21 இம் மூலத்தில் இருந்து 2011-07-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110716004452/http://www.sanscinema.com/2011/02/arammula-ponnamma-passes-away/. பார்த்த நாள்: 2011-02-27. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறன்முளா_பொன்னம்மா&oldid=3951666" இலிருந்து மீள்விக்கப்பட்டது