உள்ளடக்கத்துக்குச் செல்

ஆறன்முளா கண்ணாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆறன்முளா கண்ணடி
ஆறன்முளாரண் கண்ணாடி அதன் மூல வடிவத்தில்
ஆறன்முளா கண்ணாடி ( ஆடி )

ஆறன்முளா கண்ணாடி என்பது கையால் செய்யப்பட்ட கலப்பு-உலோக கண்ணாடியாகும், இது இந்தியாவின், கேரளத்தின், பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான ஆறன்முளாவில் தயாரிக்கப்படுகிறது. சாதாரண "வௌளி பூசிய" கண்ணாடியைப் போலன்றி, இது ஒரு கலப்பு-உலோக கண்ணாடி அல்லது மேற்பரப்பு பிரதிபலிப்பு கண்ணாடியாகும். இந்த கலப்பு உலோக கண்ணாடியைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உலோக் கலவைகள் ஒரு விஸ்வகர்மா குடும்பம் இரகசியமாக பராமரித்து வருகின்றது. இந்த கலப்பு உலோகமானது செப்பு மற்றும் வெள்ளீயம் [சீனிவாசன் 2008] ஆகியவற்றின் கலவை என்று உலோகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். கண்ணாடியின் மேற்பரப்பு பிரதிபலிப்பு தன்மையை அடைய இது பல நாட்கள் மெருகூட்டப்படுகிறது. [1] திருமண இடத்தில் மணமகள் நுழையும்போது சடங்கில் இடம்பெறும் "அஷ்டமங்கம்" என்னும் எட்டு மங்கலப் பொருட்களில் இதுவும் ஒன்று என்று கருதப்படுகின்றது. இந்த தனித்துவமான உலோக கண்ணாடிகள் கேரளத்தின் வளமான பண்பாடு மற்றும் உலோகவியல் மரபுகளின் விளைவாகும். இவை சிறந்த வரலாற்று மற்றும் கலாச்சார மதிப்பைக் கொண்டுள்ளன மேலும் இவை அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும் என்று கருதப்படுகிறன்றன. இவை ஆறன்முளாவில் ஒரு குடும்பத்தால் பாரம்பரியமாக தயாரிக்கப்படுகின்றன. அறன்முளா கண்ணாடியின் தோற்றம் ஆறான்முளா பார்த்தசாரதி கோயிலுடன் தொடர்புகொண்டதாக உள்ளது. செவிவழி செய்திகளின்படி, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பார்த்தசாரதி கோயிலிலுக்கான கலைப்பொருட்களைச் செய்வதற்காக திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து ஆறன்முளாவுக்கு கோயில் கலையிலும், கைவினைத் துறையிலும் நிபுணர்களான எட்டு குடும்பங்கள் அரசு தலைமையால் அழைத்து வரபட்டனர். அவர்களின் வழிவந்தவர்களே இந்த உலோகக் கண்ணாடியை செய்துவருவதாக கூறப்படுகிறது.

லண்டனில் உள்ள பிரித்தானிய அருங்காட்சியகத்தில் அதன் சேகரிப்பில் 45 சென்டிமீட்டர் உயரமுள்ள ஒரு ஆறன்முளா உலோக கண்ணாடி உள்ளது. [1] இந்தக் கண்ணாடிகள் 2004-05 ஆம் ஆண்டில் புவியியல் சார்ந்த குறியீட்டைப் பெற்றன. [2]

மேலும் காண்க[தொகு]


குறிப்புகள்[தொகு]

  1. 1.0 1.1 "Aranmula mirrors". The Hindu (Kollam, India). 13 July 2012. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-kerala/article3634151.ece?textsize=small&test=2. 
  2. "State Wise Registration Details of G.I Applications 2004-05". India. Archived from the original on 26 August 2013. பார்க்கப்பட்ட நாள் 13 June 2013.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆறன்முளா_கண்ணாடி&oldid=3856529" இலிருந்து மீள்விக்கப்பட்டது