ஆர். வேதாந்தாச்சார்லு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். வேதாந்தாச்சார்லு
புதுக்கோட்டையின் திவான்
பதவியில்
1894 நவம்பர் – 1899 பிப்ரவரி
ஆட்சியாளர்மார்த்தாண்ட பைரவ தொண்டைமான்
பின்னவர்எஸ். வெங்கடராமதாசு நாயுடு

ஆர். வேதாந்தச்சார்லு (R. Vedantacharlu) இவர் ஓர் இந்திய நிர்வாகி ஆவார். இவர் புதுக்கோட்டை சமஸ்தானத்தின் திவானாக 1894 நவம்பர் முதல்1899 பிப்ரவரி வரை பணியாற்றினார்.

நிர்வாகம்[தொகு]

1894 நவம்பரில் புதுக்கோட்டையின் திவான் அ.சேசையா சாத்திரி ஓய்வு பெற்றபோது, அந்த சமயத்தில் உதவி திவானாக இருந்த வேதாந்தாச்சார்லு அவருக்குப் பின் வந்தார். திவானாகப் பொறுப்பேற்றவுடன், வேதாந்தச்சார்லு பல சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். விவசாய கடன்களை வழங்குவதற்கான நடைமுறை மாற்றப்பட்டு, இனாம் நிலங்களில் குடியேற்றம் மேற்கொள்ளப்பட்டது. புதுக்கோட்டையில் ஒரு சமசுகிருத பள்ளி, ஒரு தொழில்நுட்ப பள்ளி மற்றும் ஒரு பால் பண்ணை ஆகியவை திறக்கப்பட்டது. பின்னர், அரசு பொருளாதார நெருக்கடியில் சிக்கியது. புதிதாக திறக்கப்பட்ட பள்ளிகள் விரைவில் மூடப்பட வேண்டியிருந்தது. மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து நீதித்துறை அதிகாரங்கள் திரும்பப் பெறப்பட்டு, ஒரு புதிய அலுவலகம் உருவாக்கப்பட்டது.

1897 ஆம் ஆண்டில் மாநிலத்தின் தேவஸ்தானம் துறை ரத்து செய்யப்பட்டது. மேலும் தேவஸ்தானங்களின் அதிகாரங்கள் வருவாய் துறைக்கு வழங்கப்பட்டது. வேதாந்தச்சார்லுவின் பதவிக்காலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வு 1898 இல் புதுக்கோட்டை மாநில சபை உருவாக்கப்பட்டது. இந்த சபை இரண்டு உறுப்பினர்களைக் கொண்டிருந்தது - திவான் மற்றும் ஒரு உறுப்பினர். இவர்கள் மாநில நிர்வாகத்தின் பொறுப்பில் இருந்தனர்.

வேதாந்தச்சாலு 1899 பிப்ரவரியில் ஓய்வு பெற்றார், அவருக்குப் பின் எஸ்.வெங்கடராமதாசு நாயுடு திவானாக பொறுப்பேற்றார் .

குறிப்புகள்[தொகு]

Manual of the Pudukkottai state . தமிழக அரசு. 2004. பக்.   881–883.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._வேதாந்தாச்சார்லு&oldid=2997090" இலிருந்து மீள்விக்கப்பட்டது