ஆர். வேதவல்லி
ஆர். வேதவல்லி (பி. 1935) தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார்.[1]
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
ஆர். வேதவல்லி தமிழ்நாட்டின் மன்னார்குடியில் ராமசாமி ஐயங்காருக்கும் பத்மாசனி அம்மாளுக்கும் மகளாகப் பிறந்தார்.
தொழில் வாழ்க்கை[தொகு]
தனது இளம்வயது முதல் பல்வேறு விருதுகளை இவர் பெற்றிருக்கிறார். அகில இந்திய வானொலியின் 'பழமைவாய்ந்த இசை'க்குரிய முதற்பரிசினை இவர் பெற்றுள்ளார். இப்பரிசு அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவரால் வழங்கப்பட்டது.
விருதுகள்[தொகு]
- சங்கீத கலாநிதி விருது, 2000; வழங்கியது: மியூசிக் அகாதெமி, சென்னை[2]
- சங்கீத கலாசிகாமணி விருது, 1995; வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
- சங்கீத சூடாமணி விருது, 1985 வழங்கியது: ஸ்ரீ கிருஷ்ண கான சபா, சென்னை
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-08-04. Retrieved 2014-08-06.
- ↑ http://www.dinamalar.com/news_detail.asp?id=879506&Print=1