ஆர். வி. இரவீந்திரன்
ஆர். வி. இரவீந்திரன் | |
|---|---|
| நீதிபதி-இந்திய உச்ச நீதிமன்றம் | |
| பதவியில் செப்டெம்பர் 9, 2005 – அக்டோபர் 15, 2011 | |
| நீதிபதி-கருநாடகம் உயர் நீதிமன்றம் | |
| பதவியில் பெப்ரவரி 22, 1993 – சூலை 7, 2004 | |
| நீதிபதி-மத்தியப் பிரதேசம் உயர் நீதிமன்றம் | |
| பதவியில் சூலை 8, 2004 – செப்டெம்பர் 8, 2005 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 10 அக்டோபர் 1946 |
ஆர். வி. இரவீந்திரன் (R. V. Raveendran) என்றும் அழைக்கப்படும் இராஜு வரதராஜுலு இரவீந்திரன் (பிறப்பு 15 அக்டோபர் 1946) இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஆவார். 2011 அக்டோபர் 13 அன்று இரவீந்திரன் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, உபகா திரையரங்க தீ விபத்தில் இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை விவரிக்க முடியாத வகையில் பாதியாகக் குறைத்தது. மேலும் திரையரங்க உரிமையாளர்கள், அன்சல் சகோதரர்கள் செலுத்த வேண்டிய தண்டனையான சேதங்களையும் குறைத்தது.[1] இத்தீர்ப்பின் மறுநாளான அக்டோபர் 14,2011 அன்று ஓய்வு பெற்றார். அக்டோபர் 27,2021 அன்று, இசுரேலிய உளவு மென்பொருள் பெகாசசைப் பயன்படுத்தி அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பு குற்றச்சாட்டுகளை ஆராயும் மூன்று பேர் கொண்ட குழுவை மேற்பார்வையிட இந்திய உச்ச நீதிமன்றம் இரவீந்திரனை நியமித்தது.[2]
தொழில்
[தொகு]இரவீந்திரன் அறிவியல் மற்றும் சட்டத்தில் இளநிலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார். 1968இல் வழக்கறிஞரானார். 1993ஆம் ஆண்டில் இவர் கருநாடக உயர் நீதிமன்றத்திற்கு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2004ஆம் ஆண்டில் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்ற இவர், அக்டோபர் 2005இல் இந்திய உச்ச நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.[3]
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு, 1993 பம்பாய் குண்டுவெடிப்பு, கிருஷ்ணா கோதாவரி படுகை சர்ச்சை போன்ற பல உயர்மட்ட வழக்குகளை இவர் விசாரித்துள்ளார்.[4] கிருஷ்ணா கோதாவரி படுகை தகராறு வழக்கிலிருந்து இவர் விலகியுள்ளார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Uphaar fire tragedy: SC reduces compensation to kin of victims". The Times of India. 13 October 2011. https://timesofindia.indiatimes.com/city/delhi/Uphaar-fire-tragedy-SC-reduces-compensation-to-kin-of-victims/articleshow/10339355.cms.
- ↑ "Who is Justice RV Raveendran, retired Supreme Court judge assigned to head Pegasus probe?". 28 October 2021.
- ↑ "Raju Varadarajulu Raveendran -- Profile". Supreme Court of India. Retrieved 23 February 2010.
- ↑ "Confusion prevails over SC's OBC quota verdict". Rediff. 2008-04-11. Retrieved 23 February 2010.
- ↑ "Justice Reddy to hear RIL, RNRL case". Rediff. 2009-11-04. Retrieved 23 February 2010.