ஆர். வாசுதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். வாசுதேவன்
R. Vasudevan
பிறப்புமார்ச்சு 27, 1942(1942-03-27)
தமிழ்நாடு, India
இறப்பு25 சூலை 2010(2010-07-25) (அகவை 68)
பணிஆட்சிப் பணியாளர்
விருதுகள்பத்மசிறீ

ஆர். வாசுதேவன் (R. Vasudevan) ஓர் இந்திய ஆட்சிப்பணி அலுவலராவார்.[1] இராசீவ் காந்தி இந்தியப் பிரதமராக இருந்த போது அவருடைய சிறப்புச் செயலாளராகவும்[2] இந்திய அரசாங்கத்தின் எஃகு அமைச்சகம் மற்றும் மின் அமைச்சக செயலாளராகவும் பணியாற்றினார்.[3] தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பிறந்த வாசுதேவன் தில்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரமும் ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[3] 2010 ஆண்டு சூலை மாதம் 25 அன்று வாசுதேவன் இறந்தார்.[4] இந்திய அரசு இவருக்கு மரணத்திற்குப் பின் 2015 ஆம் ஆண்டில் இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்மசிறீ விருதை வழங்கி கௌரவித்துள்ளது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Indian Express". Indian Express. 2015. 10 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
  2. http://archives.digitaltoday.in/businesstoday/20040620/trends2.html
  3. 3.0 3.1 "Babus of India". Babus of India. 2015. 10 March 2015 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Tribute to Mr R Vasudevan (IAS Retd)". The Times of India. 25 July 2012. 14 August 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Padma Awards". Padma Awards. 2015. 26 January 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 16 February 2015 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._வாசுதேவன்&oldid=3147892" இருந்து மீள்விக்கப்பட்டது