ஆர். ராஜலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆர். ராஜலட்சுமி
தமிழ்நாடு சட்டமனற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2011
தொகுதி மைலாப்பூர்
தனிநபர் தகவல்
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

ஆர். ராஜலட்சுமி (R. Rajalakshmi) ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) கட்சி சார்பாக சென்னை மாவட்டத்தின் ஒரு பகுதியான மயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதியில் 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழ்நாட்டின் பதினான்காவது சட்டமன்றத்தின் உறுப்பினர் ஆனார்.[1]

2016 சட்டமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் ஆர். நடராஜ் என்பவர் வெற்றிபெற்றார்.[2] 2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது உடனடியாக முழுஆற்றலுடன் செயல்படாமல் பொறுப்பற்று இருந்த காரணத்தினால் 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராகத் தேர்வு செய்யப்படாத பதின்மூன்று அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களில் ஆர். ராஜலஷ்மியும் ஒருவர் ஆவார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of MLAs from Tamil Nadu 2011". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
  2. "15th Assembly Members". Government of Tamil Nadu. பார்த்த நாள் 2017-04-26.
  3. Kotteswaran, C. S. (5 April 2016). "MLAs in flood-hit areas denied tickets". Deccan Chronicle. http://www.deccanchronicle.com/nation/politics/050416/mlas-in-flood-hit-areas-denied-tickets.html. பார்த்த நாள்: 2017-05-05. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._ராஜலட்சுமி&oldid=2694523" இருந்து மீள்விக்கப்பட்டது